பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் அதிர்ச்சி 247

போல் எவளாவது தென்படுவாள். 'அவள் தானோ?’ என்று அவன் ஆவலோடு பார்வை எறிந்தால், கிட்டுவது ஏமாற்றம்

அவள் அவன் பார்வையில் படவேயில்லை. மறுபடி அவன் காரை நாடி அவள் வரவுமில்லை. ஊரில் எத்தனையோ டாக்சிகள்!ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ அலுவல்கள்!

விபத்து மாதிரி தற்செயலாக ஏற்பட்டாலன்றி - அல்லது திட்டமிட்டு, குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடம் ஒன்றில் சந்தித்தாலன்றி - ஒருவரை ஒருவர் எங்கே அடிக்கடி கான முடிகிறது?

எனினும், அபூர்வமாக எதிர்பாராவிதத்தில் சில சந்திப்புகள் நிகழ்வதற்குச் சந்தர்ப்பம் துணை புரியத்தானே செய்கிறது?

ஒருநாள் பகல் ஒரு மணிக்கு, சந்திரன் காரை ஒரு ஒட்டல் முன் நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.

'சாப்பாட்டு நேரமோ?’ என்ற கேள்வி பின்னாலிருந்து வந்தது. இனிய மென்குரல்.

அவன் திரும்பிப் பார்க்கவும், அவள் நின்றாள், ஒளியில் குளிக்கும் வண்ண மலராக. அவளினும் பகட்டான ஆடைகள் அணிந்திருந்த இன்னொரு பெண்ணும் உடன் நின்றாள்.

'ஆமா. என்ன வேணும்?' என்று அவன், அவள் வனப்பை ரசிக்கும் பார்வையோடு, பேசினான்.

தன்னை அவன் மறக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டதனால் எழுந்த மகிழ்ச்சி முகத்திலே மலர்ச்சி சேர்க்க, 'டாக்சி வேணும். வருமா என்று கேட்க நினைத்தோம்’ என்றாள்.

'டிபன் பண்ணலாம்னு இறங்கினேன்’ என்று அவன் பேச்சை இழுக்கவும்,

'பரவால்லே. அவசரம் ஒண்ணுமில்லே. காத்து நிற்கிறோம். நீங்கள் சாப்பிட்டு விட்டு வாருங்கள் என்று அவள் கூறினாள்.

'இதோ அஞ்சு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன். காருக்குள் இருங்கள்' என்று சொல்லி விட்டு அவன் ஒட்டலுக்குள் போனான்.

சந்திரன் அவசரப்பட்டாலும், ஒரு வடையும் காப்பியும் என்று லிம்ப்ளா டிபனை முடித்துக் கொண்டாலும், நாகரிகப் பெரும் ஒட்டலில் ஏற்படக்கூடிய காலதாமதமும் காலநஷ்டமும் அவனுக்கும் ஏற்படத்தான் செய்தன. 'அஞ்சு நிமிஷத்தில்’