பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262 வல்லிக்கண்ணன் கதைகள்

"என்ன இங்கேயே நின்னுட்டீங்க? உங்களுக்குப் பசிக்கலே? எனக்குப் பசிக்குதே!" என்றாள் அவள். "நான் எல்லாரையும் விட்டுப் போட்டு ஒடி வந்துட்டேன். அவங்க எல்லாம் நல்லாச் சாப்பிட்டு விட்டு, துங்கிக் கொண்டிருந்தாங்க. நானும் கண்ணை மூடிக்கிட்டு படுத்திருந்தேனா? ராஜாத்தி துங்குறான்னு நம்பிவிட்டாங்க. நான் நைலா எழுந்து வந்து விட்டேன். முழிச்சு, காப்பி சாப்பிடற நேரத்திலே எல்லோரும் என்னைத் தேடுவாங்க, காணோமே. ராஜி எங்கே போயிட்டா? ஏ. ராஜம், ஏ. ராஜாத்தி என்று கூப்பாடு போட்டுக் குழம்பித் திண்டாடுவாங்க" என்றும் ரசித்து அனுபவித்து, நடிப்பு நயத்தோடு, அவள் விவரித்தாள்.

"யாரு, எங்கே இருக்கிறாங்க?" என்று அவன் கேட்டான். அவள் போதிய அறிவு வளர்ச்சியும் பொறுப்பு உணர்வும் பெற்றிராத சிறுமியாகவே இன்னமும் காட்சி தந்தாள் அவனுக்கு.

"அங்கே இருக்கிறாங்க. அப்பா, அம்மா, மாமா எல்லாரும்" என்று அவள் கைவிசி மறுகரையின் பக்கம் காட்டினாள். அந்தக் கைவிச்சின் எல்லை எவ்வளவோ? அதில் எங்கே இருக்கிறார்களோ அவளைச் சேர்ந்தவர்கள்?

"எனக்குப் பசிக்குதே, அப்புறம் நான் அழுவேன்" என்று பாவத்தோடு பேசினாள் அவள்.

நல்ல தமாஷ்தான்!” என்று எண்ணினான் அவன். ஒற்றையடித் தடத்தில் நடந்து, ரஸ்தாவை அடைந்து, சிறிது துரம் சென்றார்கள்.

அங்கு ஒரு சிற்றுார் இருந்தது. காப்பி ஒட்டல் என்ற பெயரில் அங்கே "குடிசைத் தொழில்" நடைபெறுவதும் தெரிந்தது. காப்பி என்ற பெயர் பெற்றிருந்த திரவ பதார்த்தமும் கிடைத்தது. ரவா கேசரியும் வடையும் வாய்க்கு ருசியாக இல்லாவிடினும் வயிற்றுப் பசியைத் தணிக்க உதவின.

இனி என்ன செய்யலாம்? மகாதேவன் உள்ளத்தில் தலையெடுத்திருந்த சிறு உதைப்பு நேரம் ஆகஆக வலுப்பெற்று வளர்ந்தது.

"நாம ரயிலில் பிராயணம் போகலாமா?" என்று அவள் ஆவலோடு விசாரித்தாள். -

அவள் கண்ணுக்கு விருந்தாகும் அழகி தான். விளையாட்டுக் குணம் பெற்றவள். சிறிது நேரம் பேசிப் பொழுது போக்கும் சிநேகிதிபோல் வந்தவள் தொன தொணக்கும் தொல்லையாய் தொந்தரவாய் மாறிக்கொண்டிருந்தாள். இவள் யாரோ? இவளை