பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது விழிப்பு 63

உடல்குறை உள்ளவர்கள் கூட ஏதேனும் ஒரு சிறுதொழில் தையல், வாட்ச் ரிப்பேர், குடைரிப்பேர் போன்ற எதையாவது செய்து பிழைப்பு நடத்த முயல்வதை அவன் கண்டறிந்த போது அவனுக்கு உள்ளத்தில் புதியஒளி தோன்றியது.

'நாமும் இப்படி பலருக்கும் பயன்படக் கூடிய ஏதாவது கைத்தொழிலைச் செய்து காலம் கழிக்கலாமே. ஒய்வு நேரத்தில் அறிவு வளர்ச்சிக்கு உதவும் படிப்பையும் எழுத்தையும் மேற்கொள்ள முடியுமே!’ என்று அவன் எண்ணினான்.

இந்த நினைப்பு அவனுக்கு உற்சாகமும் புது ஊக்கமும் தந்தது. அனுபவம் மிக்க ஒருவர் தையல்காரராக இருந்தார். தெரிந்த ஒருவர் வாட்ச் ரிப்பேர் தொழில் நடத்திக் கொண்டு சந்தோஷமாக இருந்தார். ஒருவர் ஸ்டவ்களை நல்லாக்குபவராகவும், இன்னொருவர் ரேடியோ பழுதுபார்க்கிறவராகவும் தொழில் புரிந்து வாழ்க்கை நடத்தினர்.

இவர்களில் ஒருவரிடம் சிறிது காலத்துக்குப் பயிற்சி பெறுவது, தேர்ச்சி பெற்ற பிறகு சொந்தத்தில் தொழில் நடத்தலாம். உழைப்பு உயர்வளிக்கும். எந்த உழைப்பும் கேவலமானது அல்ல என்ற விழிப்பு உணர்வு பெற்றான் அவன். வாழ்க்கை நம்முடையது; அதை வாழ்ந்தே தீருவோம் என்ற உறுதியுடன் புதிய பாதையில் அடி எடுத்து வைத்தான் அவன்.

('சதங்கை சிறப்புமலர் -1995)


ஒரு முகம்


ந்த முகம் - - -

அதை அவன் எங்கே எப்போது பார்த்தான்?

சந்திரனுக்கு அதுதான் பெரும் குழப்பமாக இருந்தது. அந்த முகம் அவனை சதா அலைக்கழித்துக் கொண்டிருந்தது. விழிப்பு நிலையில் பசுமையான நினைவாக; தூக்கத்தில் அழுத்தமான கனவுகளாக. ----

குறுகுறுக்கும் கண்கள். அவனைப் பார்த்ததும் படபடக்கும் இமைகள். இனிய சிரிப்பு பூக்கும் பழச்சுளை உதடுகள். அழகான மோவாய். நீண்ட வெள்ளிய அணிகள் ஊஞ்சலிடும் காதுகள். சிரிக்கும் முகம் -

சந்திரன் உள்ளத்தில் நிலை பெற்றிருந்தது. எங்காவது அந்த முகம் அவனுக்கு எதிர்ப்பட்டிருக்க வேண்டும். எங்கே?