பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நண்பர்கள் 83

பட்ஜெட் காப்பிக்குப் பால் வாங்குவதை அனுமதிப்பதில்லை. அதனால் என்ன?

இந்த உண்மையை ஆண்டியா பிள்ளையின் மனக்குறளி தானாகவே கூறிக் கொள்ளும். உரத்த சிந்தனையாக அல்ல...

கைலாசம்பிள்ளை தீனிப்பிரியர். சாப்பாட்டைவிட, நொறுக்குத் தீனி அவருக்கு, சீடை, தேன்குழல் என்று ஏதாவது எப்பவும் ஸ்டாக் இருந்து கொண்டேயிருக்கும். அது போக திடீரென்று நினைத்துக் கொண்டு, 'ஆமைவடை பண்ணு,’ 'வாழைக்காய் பஜ்ஜி செய்’, ‘உருளைக்கிழங்கு போண்டா செய்' என்று விருப்பம் தெரிவித்துக் கொண்டேயிருப்பார். அவர் வீட்டு மதினியும் அலுக்காமல் சலிக்காமல் அவருடைய ஆசைகளை நிறைவேற்றி வருவாள். அவள் கைக்கு ஒரு தனி ராசி. அவள் எதைச் செய்தாலும் அது தனி ருசியும் மணமும் பெற்றிருக்கும்.

இவை தவிர, வேர்க்கடலை என்றால் - சிறிய கடை வைத்து உள்ளுரின் சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் சிறிதளவு லாபம் பெற முடியும் என்பதை அனுபவ பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருந்த பிச்சையாப்பிள்ளை சொன்னது போல - 'கைலாசம்பிள்ளைக்கு உசிரு!' - அதுவும் எப்பவும் வீட்டில் இருக்கும்.

ஆண்டியா பிள்ளையும் - அண்ணாச்சியும் பேசி மகிழ்கிற வேளையில், வீட்டில் இருக்கிற தீனி தினுசுகள் தாராளமாக வந்து சேரும். வேர்க்கடலைக்குப் பக்கமேளமாகக் கருப்புக் கட்டித்துண்டு.

நேரம் போவதே தெரியாது. சில சமயம் ஆண்டியாபிள்ளை, துண்டை விரித்துப் படுத்துப் பேசுகிறவர் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. துங்குகிறவரை அண்ணாச்சி தட்டி எழுப்ப மாட்டார்.

'பாவம், அலுப்பு! நல்லாத் தூங்கட்டும்’ என்று விட்டு விடுவார். ஆண்டியாபிள்ளை தானாக விழிப்பு வந்து எழுந் உட்கார்ந்து, 'அசந்து தூங்கிட்டேன் போலிருக்கே! இன்னமேதான் சாப்பிடணும்' என்பார்.

அண்ணாச்சி எவ்வளவு உபசரித்தாலும் ஆண்டியாபிள்ளை அங்கே சாப்பிட மாட்டார். 'சொந்தக்காரங்க' வீட்டுக்கே போய்விடுவார்.

இந்த நட்பு பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து வளர்வது. கைலாசம்பிள்ளை வீட்டை விட்டு வெளியே போவது