பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$97 வல்லிக்கண்ணன் கதைகள் முடிக் கொண்டிருந்த கண்களைத் திறந்து பார்த்தார் பிள்ளை. பிறவிப் பெருமாள் நின்று கொண்டிருந்தார். பால்வண்ணம் பிள்ளை வாருமையா' என்று வரவேற்க என உபசரிக்க வேணும் என்

வேண்டும்; உட்காருமேன்" றெல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை. தானாகவே பிள்ளை யின் அருகில் அமர்ந்தார். நடந்திருந்த விஷயம் அவருக்கும் தெரியும். யாருக்குத் தெரியாது அந்த ஊரில்? பிறவிப் பெருமாள் ஒரு அபூர்வமான மனிதர். அவருக்கு சொத்து, குடும்பம், பண வரவு என்று எதுவும் கிடையாது. ஆனால் எப்போதும் சந்தோஷமாகத்தான் தென்பட்டார். கலகலப்பாகப் பேசிப் பழகுவார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கிறவர்களி டம், யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பார். சென்ற இடமெல்லாம் சிறப்பு’’ என்பார். சந்தோஷங்களை அறு வடை பண்ணலாம்! “அன்பை கொட்டினால் எங்கும் அன்பே மலரும்’ என்ற தன்மையில் ஏதாவது சொல்லி வைப்பார். எனவே, ஆள் ஒரு மாதிரி’ ‘வேதாந்தப் பைத்தியம்’ * லூஸ்' என்று அவரவர் இயல்புப்படி அவரை எடைபோடு வது மற்றவர் வழக்கம். அவரால் யாருக்கும் துன்பம் இல்லை. பிறருக்குத் தன்னால் இயன்ற உதவிகளை செய்யத் தயங்கா தவர் அவர். - வே, பொன்னைக் கொடுக்க வேண்டாம்: பொருளை அள்ளிக் கொடுக்க வேண்டாம். மனுஷன் அன்பைத்தந்தால் போதும். அன்பு காட்டுவதிலே கஞ்சத்தனம் பண்ணுவ தனாலேதான் மனிதர்களிடையே பகையும், பொறாமையும் போட்டியும் தலைதூக்கி வளருது. அன்பு அன்பையே விளை வ-7