பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் : OO தான், போதும் - போதும் இன்னமே வேண்டாம் என்று சொல்கிற மனநிலை ஏற்படுது. பசி தீர்கிற அந்த வேளைக் காவது ஏற்படுது பாருங்க. அதுதான் முக்கியம்' என்று பிறவிப் பெருமாள் சொன்னார். "நீங்க சொல்றது உண்மை தம்பி' என்றார் பெரியவர். ஊர் மக்கள் வெறுப்பைக் கொட்டியதனால் இடிந்து குமைந்து போயிருந்த வேளையில்-அன்பு வறுமை அவரை தீய்த்துப் பொசுக்கிய தருணத்தில்-பிறவிப் பெருமாள் அவர் உள்ளத்தில் தெளித்த அன்பும் அனுதாபமும் பால்வண்ணம் விள்ளையை ஒரு புது மனிதராக ஆக்கிவிட்டது என்றே தோன் ஹியது. அவருடைய பழைய சிறுமைகள் எல்லாம், அதிசயிக் கத்தக்க விதத்தில், அன்று அவர் உளம் குமைந்து பெருக்கிய கண்ணிரால் கரைத்து ஒழிக்கப்பட்டு விட்டன போலும். அவர் அந்த ஊரில் 'குரு பூஜை' என்று நிகழும் ஒரு விசேஷத்தின் போதும் ஊர் முழுவதற்கும் சாப்பாட்டு விருந்து படைத்தார். பிறகும்,கோயில்களில்-சிவன் கோயில், பிள்ளை யார் கோயில், அம்மன் கோயில் என்று எந்தக் கோயிலிலும்என்ன திருநாள் வந்தாலும் ஊர் மக்களுக்கு வகைக் கறியும் சோறும் ஆக்கிப் போட ஏற்பாடு செய்தார். இதற்கெல்லாம் பிறவிப் பெருமாளும் அவருக்குப் பக்க பலமாக இருந்தார். "அண்ணாச்சி, சேர்த்து வைப்பதிலே ஒரு இன்பம் கிடைக்குது. அதில் சந்தோஷம் கிடையாது. அதே மாதிரி, செலவு செய்வதிலும் ஒரு இன்பம் கிட்டு கிறது. இதிலிருந்தெல்லாம் மாறுபட்ட ஒரு இன்பமும் இருக்கு. மற்றவர்களுக்கு அன்போடு வழங்குகிறபோது நமக்கு உண்டாகிற இன்பம் இது. அதைப் பெறுகிறவர்களுக் கும் இன்பம் ஏற்படுது. அந்த இன்பம் அவர்களிடம் உண் டாக்குகிற சந்தோஷத்தைக் காண்கிறபோது நமக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சிகரமான இன்பம் இருக்கிறதே. ஆகா, ஆகா, அது தனிச் சிறப்பு உடையது அண்ணாச்சி!'