பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்தரங்கமான ஒரு போட்டி முக்க பிள்ளைக்கு இன்னும் வயசு நூறு ஆகவில்லை. ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து விட்டார் என்றால், அந்த லட்சியத்தை அவர் எட்டிவிடுவார். மூக்க பிள்ளை நூறைத் தாண்டிவிடுவார் என்றுதான் ஆனந்தக்குறிச்சிக்காரர்கள் கருதினார்கள். அந்த ஊரிலேயே அவர்தான் மூத்தவர். பாலுப் பிள்ளை என்கிற பால் வண்ண நாத பிள்ளை அவருக்கு அடுத்தபடி தான். இவருக்கு தொண்ணுாற்று நாலு முடிந்து விட்டது. மூக்க பிள்ளைக்கு தொண்ணுற்று அஞ்சு நிறைந்திருந்தது. பார்க்கப்போனால், ஆனந்தக்குறிச்சி வாசிகள் அல் பாயுள் பேர்வழிகள் அல்ல. மண்ணில் அவர்களுக்குப் பிடிப்பு அதிகம். அவர்களுக்கே அலுத்துப்போய், சரி, போகலாமே!’ என்று பட்டால் தான் சாவார்கள் போல் தோன்றியது. ஆண்களும் பெண்களும் நீண்ட வாழ்வு பெற்றவர்கள். அந்த ஊரில் சின்னஞ் சிறுசுகளைப் பார்க்க முடிவது அபூர்வமான காட்சி. அறுபதுக்கு மேற்பட்டவர்களை, எழுபதுகளையும் எண்பதுகளையும், நிறையவே காண முடி யும், தெருவில் ஒடியாடித் திரியும் குழந்தைகள் - ஹசிங். பேசப்படும்? அதுகளுக்கு அந்த ஊரில் வேலையே கிடை யாது.