பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் }{33. பாலுப் பிள்ளையும் ஒருவகையில் அவ்வூரில் பிரபலமான வர்தான். அவருக்கு சோசியம், பண்டுவம், மாந்திரீகம் எல் லாம் தெரியும், கை ரேகை பார்த்துப் பலன் கூறுவார். இத னால் எல்லாம் அவருக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. எதிர் மறையான கீர்த்தி கூட வந்து சேர்ந்திருந்தது. அவர் சொன்னால் அப்படியே நடக்கும். இத்தனை நாளைக்கு மேலே உ ரோடிருக்க மாட்டான்னு கையைப் பார்த்துச் சொல்லுவார். அந்த ஆசாமி அப்படியே குளோசாகி விடுவான். இன்ன நாள் இத்தனை மணிக்கு இவன் செத்துப் போவான் என்பார். குறிப்பிட்டபடியே நடக்கும். ரொம்பச் சீக்காக் கிடக்கிறவங்க வீட்டுக்கு இவர் இரண்டு தடவை போய் வந்தாலே போதும். மூணாவது தடவை போக வேண் டிய அவசியமே ஏற்படாது. அதுக்குள்ளே அந்த நபர் ஐயா இடம் போய்ச் சேர்ந்திடும் என்று பலரும் பேசிக் கொண்டார் கள். உரிய விவரங்களோடு வரலாறு உரைப்பார்கள். ஆகவே அவருக்குச் சாகுருவி' என்றொரு பெயரும் இருந்தது. மூக்க பிள்ளைக்கு ஏதோ உடம்புக்கு வந்தது. ஆள் வெளியே நடமாடவில்லை. வீட்டோடு தான் இருந்தார். இப்படிச் சில நாட்கள் எவர் வெளியே தலை காட்டாமல், வீட்டுக்குள்ளேயே ஒடுங்கி விட்டாலும் போதும், ஐயாவுக்கு சீட்டு தயாராயிட்டதுபோலிருக்கு. சீக்கிரம் கிழிபட்டு விடும்னு தோணுது என்று ஊர்க்காரர்கள் பேச ஆரம்பித்து விடுவார் கள். உடனே பாலுப் பிள்ளை, பெயர் பெற்ற வெற்றிலைச் செல்லத்துடன் அந்த வீட்டுக்குப் போவார். அதில் செந்தூரம், பஸ்பம், மாத்திரைகள் என்று சகலரோக நிவாரணிகளும் இருக்கும். சமயத்துக்குத் தக்கபடி, ஆளுக்குத் தக்கபடி, அவற். நில் எதையாவது எடுத்துக் கொடுப்பார். இத்தனை மணி நேரம் கழியனும் அல்லது, இன்னக்கி ராத்திரி தாண்டினாத் தான் சொல்ல முடியும் என்று கூறிவிட்டு வருவார். அப்புறம்