பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 வல்லிக்கண்ணன் கதைகள் அத்தையை கவனித்துக் கொள்வதில் மீனம்மா முன்பெல் லாம் குறை எதுவும் வைத்துக் கொண்டதில்லை. அவளு டைய தேவையை அறிந்து அத்தைக்கு, புதுப்புடவை எடுத் துக் கொடுப்பது-அல்லது, தான் உடுத்திச் சிறிதளவே பழ சாகியிருக்கக்கூடிய நல்ல சீலையை வழங்குவது என்பதை ஒரு வழக்கமாக அனுஷ்டித்த மருமகள்களில் மீனம்மாவும் ஒருத்தி. இவ்விதம் எவ்வளவோ தாராளத்தனம் காட்டிய வள் தான் அவள். என்றாலும், கால ஓட்டத்தில் ஒவ்வொருவரும் விதம் விதமான நோக்குகளில் அத்தையின் வாழ்க்கை நிலையை எடைபோட்டனர். பலரகமான கருத்துக்களும் பிறந்து பர வின. -அத்தைக்கு வயசு ஆகிக் கொண்டே போகுது. பொட் டுனு மண்டையைப் போட்டு வச்சா, பரவாயில்லே. படுக்கை யிலே விழுந்து கிடந்து மெதுவாச் செத்தால், யாரு பணம் செலவழிக்கிறது? சீக்குக்காரியை கவனிப்பது யாரு? - வாயுக்குத்து'ன்னு சொல்லி பொசுக்குனு உயிரு போயிட்டாலும் கூட, அப்புறம் எத்தனையோ செலவுகள் இருக்குமே? யாரு வீட்டிலே இருக்கிறாளோ, அவங்க தானே கட்டையைச் சுடுகாட்டுக்குப் எடுத்துப் போயி ஆக வேண்டியதை எல்லாம் செய்து முடிச்சாகணும்? அப்புறம் எழவு செலவு வேறே! -ஆமா, கிழடு இருந்தாலும் தொல்லை தான்; செத் தாலும் உபத்திரவம் தான்... எனவேதான், எனக்கு வேண்டாம் பூசணிக்காய்உனக்கு வேண்டாம் பூசனிக்காய்' என்று ஆகாத காயை தட்டிக் கழிப்பதில் ஆர்வம் காட்டுகிற விளையாட்டைப்