பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 126: சிதம்பரம் பத்திரிகையை மடித்து நாற்காலி மீது போட்டு விட்டு, உற்சாகம் இல்லாமலே எழுந்தான். மெதுவாக உள்ளே போனான். அத்தை எங்கும் தென்படவில்லை. அடுப்படிப் பக்கம் எட்டிப் பார்த்து, அத்தையை எங்கே. காணோம்?’ என்று கேட்டான். "இங்கேதான் இருந்தா... தோட்டத்து பக்கம் போனா... பூக்களை பறிச்சிக்கிட்டு வருவா என்றாள். - அவன் திரும்பலாமா என்று தயங்கி நின்றபோது, அவள் வந்ததோ வந்தாச்சு. காப்பியைக் குடிச்சுட்டே போங்க,. இதோ ஆச்சு என்று சொன்னாள். அவன் கீழே உட்கார்ந்தான். அவள் காப்பியை டம்ளரில் கொண்டு வந்து அவன் முன்னே வைத்து விட்டு, தனது விருப்பத்தை மீண்டும் வலி புறுத்தினாள். 'இப்போ அத்தை வந்ததும் சொல்லிப் போடுங்க. சித்தப்பா மக கல்யாணத்துக்காக நாங்க ஊருக்கு போறோம்; திரும்பி வர பத்து நாளு ஆகும். உன்னை எங்களோடு கூட் டிக்கிட்டுப் போக முடியாது. நீ இங்கே தனியா இருக்கவும் வசதிப்படாது. அதனாலே நீ பாவூருக்கோ, விக்கிரமசிங்க புரத்துக்கோ போறதுதான் நல்லது. நாளைக்கே புறப்பட்டு விடுன்னு சொல்லுங்களேன். இதிலே என்ன பயம்? அத்தை தான் நம்ம கூட ரொம்ப காலம் இருந்தாச்சே." “x; ; ;#3 ເສrour உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தபோதே, அவள் பேச்சை அமுக்கி விடும் ஒலியாக தாம்பாளம் கல்லின்