பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் i 33 மறுநாள் காலையில், அறையில் அந்த இடம் ரொம்ப வும் அசுத்தப்பட்டிருந்தது. வழக்கத்தைவிட அதிகமான புழுக்கைகள், திட்டுதிட்டாய் ஈர நசநசப்பு. மாதவனுக்கு அருவருப்பும் எரிச்சலும். அசிங்கம் புடிச்ச வவ்வாலை ஒழிச்சாகனுமே என்று அவன் மனம் கறுவியது. அது தற்செயலான வாய்ப்புதான். அன்று இரவும் கொசுத் தொல்லை அதிகம். வெளியே திலா ஒளி வெள்ளமாய் கொட்டிக் கிடந்தது. அதனால் கொசுக்கள் வீட்டின் இருட்டினுள் புகுந்து இரைந்து கொண் டிருந்தன. உறங்குவோரைக் கடித்து.இன்புற்றன. -- மாதவனின் தூக்கம் கெட்டது. ஜன்னல் கதவுகள், அறைக்கதவு அனைத்தையும் சாத்தினால், கொசுக்கள் படை யெடுப்பது குறையும் என்று நினைத்தான். எழுந்து, அடுத்த அறையோடு இணைக்கும் பெரிய கதவை சாத்தினான். ஜன்னல் கதவையும் அடைத்தான். மனித நடமாட்டத்தை வவ்வால் உணர்ந்து கொண்ட தாய் தோன்றியது. அமைதியாய் விட்டத்தில் கட்டையைப் பற்றிக் கொண்டு தொங்கிய அது பதட்டமடைந்தது அதன் பறப்பில் புலனாயிற்று. அது வந்து போவதற்கு உதவும் விசாலவழி அடைபட்டுப் போனதை அது உணர்ந்து கொண் டது. மேலேறியும் தாழ்ந்து தணிந்தும் வேகமாகப் பறந்த அது, தன் முகத்தில் வந்து மோதிவிடுமோ என்ற குழப்பம் மாதவனுக்கு ஏற்பட்டது. - அவன் விளக்கைப் போட்டான். ஒளி பாய்ந்து வெளிச் சப்படுத்தியது அறையை. அதனால் வவ்வால் மேலும் கலவரம் அடைந்தது. வெளிச்சம் அதன் பார்வையை பாதித்தது. அது குருடு