பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§35 வல்லிக்கண்ணன் கதைகள் தூக்கக் குழப்பத்தில், அந்த வவ்வால் தான் வத்திருக் குமோ என்றொரு அபத்த நினைப்பு... அது எப்படி வரும்? அதுதான் செத்து விட்டதே! முடுக்குக் கதவு வேறே அடைத் துக் கிடக்கு அது சாகாமல் கிடந்து காற்று பட்டதும் உணர்வு பெற்று, வானில் பறந்து போய், வழக்கமான வழி மூலம்... சீ பைத்தியம்! அவன் மனமே அவனை எள்ளி நகைத் தது. அது செத்துக்கிடக்கு. இனிப் பறக்காது... பறக்கும் சத்தம் கேட்கவில்லை இப்ப. -அப்படின்னா அதனுடைய ஆவியாக இருக்குமோ?... மாதவன் துங்கிப் போனான். காலையில் கண் விழித்ததும், வெளிச்சத்தில் அவன் பார் வையில் பட்டது அதே இடத்தில் அசிங்கமாய் ஈர நசநசப்பும் புழுக்கை களும். . அவன் மனம் சங்கடப்பட்டது. -இன்னொரு வவ்வால் வந்திருக்கு! இப்போது அவன் உள்ளம் முதல் வவ்வாலுக்காக இரக் கப்பட்டது. முடுக்குக் கதவை திறந்தான். அது சுவர் அருகில் குறுகி முடங்கி விறைத்துக் கிடந்தது. மூக்குப்பொடி நிறமாய்; சிலசில இடங்களில் கறுப்பு படிந்து: குறள் உருவமாய், இறக்கைகளைக் குறுக்கிக் கொண்டு; அசிங்கமான மூஞ்சியோடு அது கிடந்தது;