பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 136 எத்தனை ஜீவத்துடிப்புடன் இயங்கியது இது பறக்கும் போது எவ்வளவு பெரிசாய், என்ன வேகம் நிறைந்ததாய், சில கோணங்களில் அழகாகக்கூட இருந்தது; அதை அசிங்க மான ஜடம் ஆக்கிப் போட்டேனே! அவன் மனம் வருத்தப் பட்டது. இதை கொன்று விட்டதால் என்ன பிரயோசனம்? அறை அசிங்கப்படுவது நிற்கும் எனத் தெரியலியே. இன்னொரு வவ்வால் உடனடியாக வந்திட்டுதே! அதை கொன்றால் வேறொண்ணு வரும். அப்படி சங்கிலித் தொடராக நடந்து கொண்டேயிருக்கும். மாதவன் பெருமூச்செறிந்தான். குனிந்து செத்த வவ் வாலை இரண்டு விரல்களால் பற்றி எடுத்து, வெளியே கொண்டு போய் பாழுங் கிணற்றுள் விட்டெறிந்தான். அறைக்கு வந்ததும், அழகான அறையின் சுத்தமான தரையில் அந்த இடத்தில் கறையாகப் படிந்திருந்த அசிங்கத் திட்டுகளாக ஈரமும், சிதறிக் கிடந்த புழுக்கைகளும் தன்னைப் பரிகசித்துச் சிரிப்பதாகவே மாதவனுக்குப் பட்டது. 亚

  • செளராஷ்டிரமணி-பொங்கல் மலர் 1984