பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 143 அதிகமாக சேகரிப்பது அவளுக்கு சந்தோஷம் தரும் காரிய மாக இருந்தது. சில பங்களாக்களின் வெளிப்புறச் சுவர்க ளுக்கு மேலாக வளர்ந்து தொங்கும் செடிகளில் குலுங்கிப் பணிச்சிடும் பிங்க் நிற போகன்வில்லாப் பூக்களும் அவளுக்குப் பிடித்தமானவைதான். செம்பரத்தம் பூக்கள் அவளது ஆனந் தத்தை அதிகப்படுத்தின. அவற்றை நிறைய நிறையப் பறித்து வைத்து அவள் விளையாடினாள். "உங்களுக்கு எந்தப் பூ மாமா பிடிச்சிருக்கு ?’ என்று உஷா ஒருநாள் சுந்தரத்தைக் கேட்டாள். "எல்லாப் பூக்களும் எனக்குப் பிடிச்சிருக்கு’ என்றார் வiர். "ஊம்ம், எது ரொம்ப்பப் புடிச்சிருக்கு? 'ரொம்ப ரொம்ப எனக்குப் பிடிச்ச பூ எது தெரியுமா ?” என்று அவர் அவள் ஆவலைத் தூண்டும் விதத்தில் கேட்டு நிறுத்தினார். “எது மாமா, எந்தப் பூ?’ என்று அவள் அவசரப்படுத்தி னாள். ‘எல்லாப் பூக்களையும் விட அழகாக இருக்கிற உஷா தான் எனக்குப் பிடித்த பூ. உஷா ஒரு பெரிய பூச்செண்டு. இனிய பூந்தோட்டம்னே சொல்லலாம்’ என்று சுந்தரம் கூறினார். சிரித்தார். போங்க மாமா! கேலி பண்றிங்க!' என்று செல்லச் சிணுங்கல் சிணுங்கினாள் உஷா. "நிஜம்மா நீ ரொம்பப் பெரிய பூ தான். உன் முகம் ஜோரான ரோஜாப்பூ. உன் கைகள் கூட சிறுசிறு ரோஜாக் கள் தான். கண்கள் கருநீலப் பூ. பாதங்கள் தாமரைப்பூ.