பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 144 வவ்வவ்வே! என்று வாயைக் கோணலாக்கி பழிப்புக் காட்டினாள் சிறுமி, பூக்களைச் சிதறி வீசி விட்டு ஓடிப் போனாள். 'குரங்கு செங்குரங்கு என்று உரத்துக் ສ.ສ.ສrr சுந்தரம். அழகிய பூக்களை அப்படி அந்தப் பெண் நாசப் படுத்தியது அவருக்கு எரிச்சல் தந்தது. உஷா திரும்பிப் பார்க்காமலே போய் விட்டாள். நாளைக்கு அவளுக்கு அழகான பூக்கள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்; அவள் முகமே பெரிய ரோஜாப் பூவாய் சிரிப்பதைக் காணவேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டார். 'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும்’ என்பது வாழ்க்கையில் சகஜமாக நடப்பதுதான். சுந்தரத் தின் விஷயத்திலும் அப்படித்தான் ஆச்சு. மறுநாள் மேட்டு நிலம் பக்கம் அவர் உலாப் போக முடியவில்லை. அவரைக் கண்டு சில முக்கியமான விஷயங் கள் பேசுவதற்கென்று சிலர் வந்து விட்டார்கள். அதுக்கு அடுத்த நாளும். அப்புறமும்... தொடர்ந்து பத்து நாட்கள் அவர் அங்கே போகமுடியாமலே போச்சு. வெளியூர் போக நேரிட்டது. சுந்தரம் திரும்பி வந்ததும் மாலை உலா கிளம்பினார். வழக்கமான இடத்துக்குத்தான். உஷா விளையாடிக் கொண்டிருப்பாள்; தன்னைப் பார்த்ததும் மூஞ்சியை உம் மென்று வைத்துக் கொண்டு கோபமாக இருப்பாள்; ஏன் இத்தனை நாள் வரலே என்று கேட்பாள்... இப்படி மனம் எண்ணக் காற்றாடியை மேலே மேலே பறக்க விட, அவர் வேகமாக நடந்தார்.