பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 வல்லிக்கண்ணன் கதைகள் பெரிய ஆலமரத்தின் கீழே, ஒளிப்பெருக்கின் வைர ஊசிபோல் திகழக் கூடிய சிறுமி இல்லை. அவளது விளை யாட்டுப் பொருள்களும் காணப்படவில்லை. அந்தப் பூங் கொத்து வண்ண வண்ணப் பூக்களை சேகரிப்பதற்காக அலைந்து திரிகிறதோ என்ற சந்தேகத்தில் அவர் கண்கள் அங்குமிங்கும் தாவித் திரிந்தன. - எங்குமே அந்த உயிர்க் கவிதை இல்லை. இந்த நேரத்தில் உஷா வீட்டுக்குள் அடைந்து கிடக்க மாட்டாளே? விசேஷ காரணம் ஏதாவது இருக்க வேண்டும். அவர் மனசில் ஓர் பதைப்பு. சுந்தரம் அந்தச் சிறிய வீட்டை, பெரிய மனிதர்களின் பொழுது போக்கு மன்றம் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த எடுப்பான கட்டிடத்துக்கு அருகில் இருந்த அழகிய வீட்டை, நோக்கி நடந்தார். "கிளப் ஜீவனோடு தான் தென்பட்டது. பக்கத்துச் சிறிய வீட்டில் ஒளி குன்றிப்போனதாக அவருக்குத் தோன் றியது. அன்னியமான வீடு. அந்த அம்மா அறிமுகமானவளும் இல்லை. சிறு பெண் உஷாவை அவள் விளையாடும் மரத் தடியில் சந்தித்துப் பேசியதுதான். அவளுடன் அவள் வீட்டை எட்டிப் பார்க்க அவர் வந்ததுகூட இல்லையே! . சுந்தரம் வெளி கேட் மீது கை பதித்தவாறு தயங்கி நின்றார். உஷா என்று அவர் உள்ளம் கூவியது. குரல் கொடுக்கவில்லை அவர். . வ.-10