பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏51 வல்லிக்கண்ணன் கதைகள் வாங்கித் தின்றவர்கள் அவள் முன்னே புகழ்ந்தார்கள். “செல்லம்மா கைக்கே தனி ருசி தான். அவ எது செஞ் சாலும் அமிர்தமா இருக்கும்’ என்று ஐஸ் வைத்தார்கள். அவள் இல்லாத போது, இந்தப் போக்குப் போனா எத்தனை காலத்துக்கு தாக்கு பிடிக்க முடியும்? செக்கவை; பொன்னு இருந்தாலும் செதுக்கிச் செதுக்கித் தின்னா எவ் வளவு காலம் நீடிக்கும்னு சொல் வடை சொன்னவங்க சும்மாவா சொன்னாங்க!” என்ற ரீதியில் பேசினார்கள். 'அய்யாப்பிள்ளையும் அம்மாளும் இப்படி கணக்குப் பாராமல் காலி பண்ணினால், ஒரு நாளைக்கு தலையிலே கை வச்சுக்கிட்டு உட்கார வேண்டியதுதான் என்றார்கள். அவர் கள் அப்படி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள். சின்னையாப்பிள்ளை துணிந்து புதுமைகள் பண்னத் தயங்கமாட்டார். யாரும் செய்யத் துணியாத விதத்தில், அவர் திடீரென்று தனது வயல்களில் புகையிலை பயிரிட்டார். 'அவ்வளவும் தங்கம் பணமாக் காய்ச்சுத் தள்ளப் போகுது பாரு!’ என்று அளந்து கொண்டிருந்தார். ஏகப்பட்ட பணம் செலவு பண்ணினார். அவருடைய போதாத காலம் புகையிலைப் பயிரில் நோய் விழுந்து, இலை உரிய முறையில் வளராமல், சுருட்டை சுருட்டையாகிக் கெட்டுப்போச்சு, இம்முயற்சியில் பல ஆயிரம் ரூபாய் கடன் சேர்ந்தது. பணம் புரட்டி விடலாம் என்று நம்பிக்கையோடு, எல்லா வயல்களிலும் வாழை பயிரிட்டார் அவர், வாழ வைக்கும் பயிர் வாழை, இரண்டு வருடத்தில் பத்தாயிரக் கணக்கில் பணம் திரட்டிவிட முடியும். இந்தக் கடன் எல்லாம் துரசு' என்று வாய்ப்பறை அறைந்தார் அவர்,