பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 15劉。 வாழை வைத்து லாபம் கண்டவர்கள் அந்த ஊரில் இருந்: தசர்கள். ஆனால் சின்னையாவுக்கு வாழை கை கொடுக்க வில்லை. புயல், மழை என்று கெடுத்தது ஒரு வருடம். மறு வருடம் மழை, தண்ணிர் இல்லாமல் காரியம் கெட்டது. இதிலும் அவருக்குப் பெரும் நஷ்டம். இப்படியே மஞ்சள் என்றும், இஞ்சி என்றும், வெங்காயம் என்றும் மாற்றி மாற்றி சோதனை பண்ணினார். எதுவும் கை கொடுக்கவில்லை. ஆகவே, வயல்கள், வண்டி மாடு, உழவு மாடுகள் எல்லாவற்றையும் விற்று, கடனை அடைத் தாா. அவருடைய வளர்ச்சியை கிண்டல் பண்ண விரும்பிய உள்ளூர் நையாண்டிப் புலவர் இப்படி ஒரு பாட்டுப் பாடினார் ‘வாழவே வைக்கும்’ என்று வாழையை வைத்தாய்-போற்றி! வாழை போய் மஞ்சளே கண்டாய் போற்றி! மஞ்சள் போக்கி விட்டு, இஞ்சியை வைத்தாய் போற்றி! இஞ்சியும் உள்ளி போல் நின்றதாலே, உள்ளியை வைத்தாய் நீயும். உள்ளியும் உள்ளடங்கிப் போனதாலே நீயும் உள்ளேயே போனாய் போற்றி! சின்னையாப்பிள்ளை நல்ல ரசிகர். இந்தப் பாடலை ரசித்து, சபாஷ்டா பாண்டியா!' என்று பாடியவரின் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர். சின்னையாப்பிள்ளை சிவபுரத்தின் இளவட்டங்களுக்கு வழிகாட்டும் பெரியவராகவே வளர்ந்து வந்திருந்தார்.