பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 வல்லிக்கண்ணன் கதைகள் ஒரு சமயம் அவர் வட்டாரத்துப் பையன்களை எல்லாம் சேர்த்து சடுகுடு சங்கம் அமைத்தார். தினசரி ஆற்று மண லில் போய் மணிக்கணக்கில் ஆடிக் களித்தார்கள். பிறகு ஒரு சிலரை யோகாசனப் பயிற்சியில் ஈடுபடுத்தினார். ஆசனங்கள் பயில்வதற்கும் ஆற்று மணல்பரப்பு நல்ல தளமாக உதவியது. ஊருக்குள்ளேயே, கோயிலுக்கு முன்புறமும், பிரகாரத்தி லும் பந்தாட்டத்தில் ஈடுபட்டார்கள் இளைஞர்கள். பெரியவ ரின் தூண்டுதலினால்தான். ஒரு காலத்தில், நாடகங்கள் போடுவது என்று பெரிய பிள்ளையும் ஊர் பிள்ளையாண்டான்களும் தீர்மானித்துடி அமர்க்களப்படுத்தி ஏதோ ஒன்றிரண்டு நாடகங்களும் நடித் - தார்கள். நாடக ஒத்திகைக்கெல்லாம் அவர் வீடு இடம் கொடுத்தது. அவர் வீட்டில் எப்பவும் பல பேர் கூடியிருப்பார்கள் சரி யான சோம்பல் மடம் அது. படுத்துத் துங்குகிறார்களும், படித்துப் பொழுது போக்குகிறவர்களும் போக மற்றப் பேர் சீட்டாடி அந்த இடத்தைக் கலகலப்பாக வைத்திருப்பது வழக்கம். பிள்ளை மனைவி தடை எதுவும் சொல்வதில்லை. பிறகு அவள் செத்துப் போனாள். பெரியபிள்ளை வைத்தது சட்டம் என்றாகி விட்டது. திடீர் திடீர் என்று அவர் கோஷ்டி சேர்த்துக் கொண்டு குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் என ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். திருவனந்தபுரத்துக்குக்கூட ஒரு சமயம் போய் வந்தார்கள். அப்புறம் பிள்ளைக்கு ஒரு ஐடியா உதயமாயிற்று. சுற்று: வட்டாரத்தில் உள்ள மலைகள் மீதெல்லாம் ஏறி பார்த்து விட