பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலைகாரன் கொலை அவன் கண்ணில் மிதந்தது. கொலை அவனுடைய கைவிரல்களில் துடித்தது. கொலை அவனது ஒவ்வொரு அங்கத்திலும் பதுங்கித் துறுதுறுத்தது. கொலை அவன் எண்ணத்தில் இருந்தது. கொலை அவனது உள்ளத்தில் உறைந்திருந்தது. கொலை அவ னுடைய தேக ரத்தத்திலே கிளுகிளுத்துக் கொண்டிருத்தது. அவன் காலடிகளில் அது பம்பி நகர்ந்தது. அப்பொழுது இரவு மணி பத்து. உலகம் இருளில் குளித்துக் கிடந்தது. கொலை எனும் நினைப்பிலே ஊறி யிருந்தான் அவன். . நசுநசுவென்று அழுகுணித்துறல் சிணுங்கிக் கொண் டிருந்தது. ரஸ்தாப் பரப்பு எங்கும் தண்ணீர் தெளித்து விட்டது போலிருந்தது. அது வேர்வையில் குளித்தது போலுமிருந்தது. சிறிது தொலைவுக்கு ஒன்றாக நின்ற எலெக்ட்ரிக் கம்பங்களில் ஒளிப்பூ பூத்துத் தொங்கியது. நசுநகத் துரற்றல் அற்புதப் பூச்சிகள்போல் மினுகிலுத்தது. விளக்குகளின் கண்ணிர்த் திவலைகள் போலுமிருந்தது.