பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்க ன்ைனன் 164: விட்டான். அவன் உள்ளத்தில் சைத்தான் குடிபுகுந்து ஓங்கி விட் அவனே வெறி நிறைந்த ஒரு ஹைடு ஆக டான்... ... வெறுப்பின் விளைவாக, கொடுமையின் நினைப்போடு, வந்து நின்ற அந்நியனின் கண்களிலே அவன் உள்ளத்தை உணர்ந்தார் டாக்டர் மாதவன். அவனைப் போன்ற மனி தர்கள் எத்தனையோ பேரை ஆராய்ந்து அறிந்தவர்தானே அவர்! அன்புப் பசியுடன் தவித்த அவனுக்கு அன்பான உப சரணை தரத்துணிந்தார். சக மனிதனின் அனுதாபத்துக்கு ஏங்கிய அவனை ஒரு மனிதனாக ஏற்று மதிக்க முன்வந் தார் அவர், ... அவன் திகைப்புற்றுச் செயலற்று நின்றான். ஏன் இப்படி மலைத்துப் போய் நிற்கிறீர்கள்? இங்கு உட்காருங் கள், ஐயா... அடடா மறந்தே போனேன். நீங்கள் சாப் பிடவில்லை என்று தெரிகிறது. உட்கார்ந்து சாப்பிடுங்கள். சோறு இருக்காது என்றே நினைக்கிறேன். கொஞ்சம் இட்லி இருக்கிறது. பழங்களும் தருகிறேன். சாப்பிட்டு விட்டு, நீங்கள் விரும்பினால் இங்கேயே படுத்துக் கொள்ளலாம். வெளியே எங்காவது போக விரும்பினாலும் போகலாம்...” மாதவன் அன்பு கலந்த குரலில் பேசினார், அது அவனை, திக்குமுக்காடச் செய்தது. அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. சிலை போல் நின்றான். டாக்டர் எழுந்து அவன் அருகில் வந்தார். அவன் இரண்டு எட்டுகள் பின் னால் நகர்ந்தான். அவர் அவன் தோள் மீது நட்பு முறை யில் கை பதித்து, குழந்தையின் முகத்தை நோக்கிச் சிரிப் பது போல் சிரித்தபடியே பேசினார்: ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? தயவு செய்து ஏதாவது,