பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 வல்லிக்கண்ணன் கதைகள் சொல்லுங்களேன். தேடி வந்து இப்படி மெளனம் சாதித்து நின்றால்?... அந்த மனிதன் கண்களில் நீர் துளிர்த்தது. அவன் ஏதோ பேச விரும்பியவன் போல் வாயைச் சற்றே திறந்தான். உதடுகள் துடித்தன. சட்டென்று, அவன் தன் கையிலே மறைத்து வைத்திருந்த கத்தியைக் கீழே வீசி விட்டு, திரும்பி வாசல் வழியே ஓடினான். திரும்பிப் பாராமலே ஓடினான். வெளி இருளில் கரைந்து விட்டான். பெருமூச்செறிந்தார் மாதவன். 'அவன் பைத்தியமாக இருக்கலாம், ஹைப்போக் காண்ட்ரியாக்-பாராதியாக்-ஏதோ ஒரு மேனியாக் எப்படி இருந்தாலும், அவன் ஒரு மனிதன் தானே? மனிதக் கடலிலே நிலை இழந்து தவிக்கும் ஒரு சிற்றலை இப்படி அவர் மனம் முனங்கியது. அவர் கைகளோ அவசரமாக கதவை நன்றாகச் சாத்தித் தாளிட்டன. []