பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 172 சுயம்பு குழப்பமடைந்தான். வகுளபூஷணம் ஊரிலே இல்லையா? வெளியூர் போயிட்டாரா?” என்று முணுமுணுத் தான். ஆமா, அவர் அடிக்கடி எங்காவது வெளியூர் போயிடு வார். எப்ப போவார், எப்ப வருவார்னு சொல்ல முடியாது...' 'ஊம்ங் என்று பெருமூச்சு உயிர்த்தான் சுயம்பு. என்ன் சொல்வது, என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. விளக்கு வெளிச்சத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்ற சுயம்புவை கவனித்து நின்ற அலுவலரும் ஒன்றும் பேச வில்லை. . வகுளபூஷணம் ஊரிலே இருப்பார்லு நினைத்தேன். அவர் இல்லையா? என்று பல நிமிடங்களுக்குப் பிறகு சொல் உதிர்த்தவனை மற்றவர் கூர்ந்து நோக்கி நின்றாரே தவிர, அவராக ஒன்றும் சொல்லவில்லை, "அவர் வீடு எங்கே இருக்கு? அதைக் காட்டினால் உதவியாயிருக்கும் என்றான் சுயம்பு, "இப்ப அந்த வீட்டிலே யாருமே இல்லை. சும்மா பூட்டித் தான் கிடக்கும்."

  • "வீடு எங்கே இருக்குதுன்னு பார்த்துக் கொண்டால், తTలె முறை வந்தால் வசதியாக இருக்கும்ே. அது தான!

மற்றவர் உள்ளே திரும்பி, 'முருகா!' என்றார். ஒரு ஆள் வந்தான். வேலைக்காரன்.