பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 வல்லிக்கண்ணன் கதைகள் "இவர் கூட போயி, வகுளபூஷணம் வீட்டைக் காட்டு’ என்றார் அலுவலர். அங்கே நீங்க தங்க முடியாது. வீட்டிலே யாரும் கிடையாது... இந்த ஊரிலே வேறே யாரையாவது தெரியுமா? தெரியாதே' ‘அப்ப நீங்க டவுனுக்குத் திரும்பறதுதான் நல்லது. கடைசி பஸ் பத்தரை மணிக்கு இருக்கு. இப்போ பத்தே காலாச்சு. நேரே பஸ் ஸ்டாப்புக்குப் போனா லாஸ்ட் பஸ்சை பிடிச்சிடலாம். முதல்லே அவர் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்' எனக் கூறி சுயம்பு நகர்ந்தான். "உங்க பேரு என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே?’ என்று குறிப்பிட்டார் மற்றவர்.

  • அது உங்களுக்கு என்னத்துக்கு என்று சொல்லி நடந்

தான் சுயம்பு. அவர் 'முருகா! என்று சுயம்புவோடு நடந்த ஆனை அழைத்தார். 'அவன் அவர் அருகே வந்ததும் அவர் சொன்னார்: தணிவான குரலில்தான் பேசினார். இந்த ஆளைப் பார்க்கை யிலே சந்தேகமா இருக்குது. குடிச்சிருப்பான்னு தோணுது. கொஞ்சம் எச்சரிக்கையாயிரு, அந்த வீட்டிலே என்ன செய்யப் போறானோ..? 'அன்பகம்’, ஊரைப் போலவே இருட்டில் அமைதியாகத் தூங்கி நின்றது.