பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 வல்லிக்கண்ணன் கதைகள் பரந்த உள்ளமும் விசால நோக்கும் கொண்டவர். புத்தகங் கள் படிப்பவர். உலகம் தெரிந்தவர். சிந்திக்கக் கற்றவர். -மனிதரில் உதவாக்கரை என்று எவனுமே கிடையாது. ஒவ்வொருவனிடமும் ஒவ்வொரு திறமை, தனித்தனி இயல்பு கள் மறைந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டு உணர்ந்து அவன் அவன் இயல்புகள்-தகுதிகள்-திறமைகளுக்கு ஏற்ப காரியங்கள் செய்ய வாய்ப்பும் வசதியும் உண்டாக்கிக் கொடுத் தால், எவனும் நன்கு பிரகாசிக்க முடியும். அண்ணாச்சி இவ்வாறு எண்ணுவது உண்டு. பாண்டிய னின் இயல்புகளையும் போக்குகளையும் அவர் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். இப்போது அவனையும் அவ னது சகாக்களையும் சேர்த்து ஊருக்கு நல்லது செய்யலாமே என்று அண்ணாச்சி நினைத்தார். பாண்டியனிடமே பேசி னார். அவன் உற்சாகமாக அவரை ஆதரித்தான். இப்படியாக கட்ட பொம்மன் நற்பணி மன்றம் பிறந் தது அந்த ஊரில். அண்ணாச்சியின் வீடு மன்றத்தினர் கூடும் இடம் ஆயிற்று. பத்திரிகைகள், புத்தகங்கள் குவிந்தன. அங்கே. பொழுது போக்குக்கான விளையாட்டு சாதனங்களும் சேர்ந்தன. சுகா தாரம், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, தெருக்களைச் சுத்தப் படுத்துவது, கோயில் பிரகாரங்களை அழகு செய்வது என்று வேலைத் திட்டங்கள் தடபுடல்பட்டன. அண்ணாச்சி தலைவர் ஆனார். பாண்டியன் தளபதி. உற்சாகம் நிறைந்த பையன்கள் தொண்டர்கள். தூங்கிக் கிடந்த ஊர் விழிப்பு பெற முயன்றது. உரிய காலத்தில் மழை சீசன் வந்தது. வானமே கிழிந்து, எங்கோ பதுக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணிர் முழு