பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 186 வதும் கொட்டோ கொட்டித் தீர்வது போல, மழை இரவு பகல் எந்நேரமும் பெய்தது. 'எந்த வருஷமும் இல்லாத மழை இந்த வருஷம் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆற்றிலே வெள்ளம் என்ற தகவல் வந்தது. வெள்ளம் அதிகரித்துக் கொண்டே போகிறது... முக்கால் மண்டபத் துக்கு சுற்றி ஓடுது. மண்டபத்தை முழுகடித்து விடும் தண் ணிர் என்று செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. அத்துடன் கலந்திருந்த ஒரு தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மண்டபத்தின் தட்டட்டியில் (மொட்டைமாடி”யில்) முன்று ஆட்கள் இருக்கிறார்கள். யாரோ பரதேசிகள். ாத்திரி மண்டபத்துக்குள்ளே படுத்துக் கிடந்தார்கள் போல. வெள்ளம் வரவும் உயரே தட்டட்டிக்குப் போயிருக்கிறார்கள். அபாய நேரத்தில் அப்படி உயரே ஏறிப் போவதற்கு என்றே வசதியான இரும்பு ஏணி ஒன்று அங்கு உறுதியாகப் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. பரதேசிகள் மேலே போய் விட்டார்கள். வெள்ளம் வற்றி விடும் என்று அவர்கள் எதிர் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளம் அதிகரித்து மண்ட பத்தையே மூழ்கடித்து விடும் நிலையில் எவ்வியது... அப் புறம் பரதேசிகள் அரோகரா! - - எனவே, ஊர் கும்பலாகச் சாடியது ஆற்றங்கரையில். வேடிக்கை பார்க்கத்தான். - மண்டபத்தின் உயரே, பொங்கிப் புரண்டு பாய்ந்தோடும் வெள்ளத்தின் நடுவில், மழையில் நனைந்து, குளிராலும் பயத்தாலும் நடுங்கி நின்ற பரதேசிகள் பரிதாபத்துக்குரிய உருவங்களாகத் தென்பட்டார்கள். -