பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1932 படுத்தப்படாத-செயல்படுவதற்கு நிச்சயம் வாய்ப்புக் கிட்டும் என்ற நம்பிக்கைகூட தர முடியாத-அந்த எண்ணத்தை நாள் தோறும் வளர்த்து வந்தார். "இந்த வருடம் எப்படியாவது நம்ம ஊருக்குப் போய் விட்டு வரவேண்டியதுதான். முப்பது முப்பத்தஞ்சு வருடங் களுக்கு முந்திப் பார்த்தது. கோயிலும், பிள்ளையார் கோயில் நந்தவனமும், தெப்பக்குளமும், அரச மரமும், ஆறும் அப்ப டியே கண்ணுக்குள் நிற்கின்றன. அவற்றை எல்லாம் திரும் பவும் பார்க்க வேண்டும். அப்போது சின்னப்பயல்களாகத் திரிந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேணும்!” இவ்விதம் அவர் எண்ணாத நாள் கிடையாது. பூவுலிங்கம் வெறும் பூவு ஆக, எலேய் பூவு-அடய் பூவுப் பயலே’ என்று அதட்டுவோர் குரலுக்கு அஞ்சி ஒடுங்கிய பணி வுடன் அருகே வரும் சின்னப்பயலாகத் திரித்து கொண்டிருந்த காலத்திலேயே, ஒரு பெரிய மனிதர் பெரிய மனசு பண்ணி அவனைப் பட்டணத்துக்கு அழைத்து வந்துவிட்டார். அவர் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டு, போட்டதைத் தின்று, பிள்ளைகளை எடுத்து வைத்து, சகல பணி விடை களும் செய்து, இரவு-பகலாக விட்டு நாய் மாதிரி காத்துக் கிடப்பதற்காகத்தான் ஊரில் பெரிய வீட்டுப் பெரிய ஐயா அவனைத் தம்முடன் அழைத்து வந்தார். பூவுப்பயலின் அப்பன்காரனும் ஆத்தாக்காரியும், எச மான், இந்தப் பயல் இங்கே இருந்தால் வீணாக் கெட்டு சீரழிஞ்சு போவான். இவனை உங்களோடு கூட்டிக்கிட்டுப் போயி ஆளாக்கி விடுங்க” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண் டதனால்தான், சிறுகுளம் முதலாளி மகன் கைலாசம்பிள்ளை அவனைப் பட்டணத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அவனுக்கு வயது பத்து.