பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#97 வல்லிக்கண்ணன் கதைகள் ஆகவே, பூவுலிங்கம் தனது எண்ணத்தை தன் உள்ளத் திலேயே வைத்து, தானாகவே புழுங்கிக் குமைய வேண் டிய அவசியம் ஏற்பட்டது. அவன் கையில் பணம் சேர வழி ஏது? பிள்ளை வீட்டி லேயே அவன் வளர்ப்புப் பையன் மாதிரி வாழ்ந்தான். சம்ப ளம் என்று எதுவும் அவனுக்குத் தரப்படவில்லை. எனினும், அவன் குறை கூறுவதற்கு வழி இல்லாமல் அவனது தேவை கள் எல்லாம் சரிவர பூர்த்தி செய்யப்பட்டு வந்தன. இந்த விதமாகப் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. திடீ. ரென்று ஒரு நாள் கைலாசம் பிள்ளை செத்துப்போனார். அவர் மனைவியும் மகளும் பட்டணத்திலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். - “பூவு, நீ வேணுமின்னா ஊருக்குப் போ. செலவுக்கு வேண்டிய பணம் தாரேன்’ என்று பெரிய அம்மாள் சொன் னாள். ஒரேயடியாக ஊருக்குப் போய் என்ன செய்வது என் பது பெரும் பிரசினையாக அவனை மிரட்டியது. அதனால் அவன் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. பூவுலிங்கம் வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள், திருப் பங்கள், தேக்கநிலைகள் எல்லாம் ஏற்பட்டன. அவன் வேறொருவர் வீட்டில் வேலையில் சேர்ந்தது, அந்த இடம் பிடிக்காமல் வெளியேறியது, சிற்சில கடைகளில் வேலைக்கு அமர்ந்து காலம் கழித்தது, எல்லாம் அவனு டைய வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்ட மேடு பள்ளங்கள் தான். 'திருப்பம்’ என்று அவனது இருபத்தைந்தாவது வயசில் நிகழ்ந்த திருமணத்தைச் சொல்லலாம்.