பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 214 வெளிச்சப் படுத்தியது. சிரிக்கும் செந்தாமரை. ஒளி குறு குறுக்கும் கரிய விழிகள், குழந்தைத்தனமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அறியும் அவாவும் உணர்வு மெருகேற்றிய குமரிப் பெண் முகம். - -"மாம்பழ மங்கை கதையைக் கேட்பதில் அவளுக்கு மிகுந்த ஆர்வம். ராஜா. குழந்தை பெறாத ராணிகள். ராஜாவின் தபசு. ஒரு முனிவரின் கிருபை, ஒரு மாம்பழம். இதை முழுவதும் தின்று விட வேண்டும்; கொட்டையைக் கூட, அப்ப குழந்தை கிடைக்கும் என்ற அருள். இளைய ராணி மாம்பழத்தின் சுவைப் பகுதிகளைத் தின்றுவிட்டு, கொட்டையைக் கிணற்றில் போட, அதிகாலையில் கிணற்றுக் குள்ளிருந்து அதிசயமான ஒரு மணம் வர, அந்தப் பக்கமாக வந்த மூத்த ராணி உள்ளே எட்டிப் பார்க்கிறாள். அற்புதமான ஒரு தாமரைப் பூ இதழ்கள் விரித்து, அழகாகப் பெரிசாக, சிரிப்பது போல் மலர்ந்திருக்கிறது. அதன் நடுவில் ஒரு குழந்தை. கின்னஞ்சிறுசாய்; சிங்கார மாய்ச் சிரித்தபடி தாமரைப் பூ மேலே வருகிறது. ராணி பிள்ளையை ஆசையோடு எடுத்துக் கொள்கிறாள். அதுதான் மாம்பழ மங்கை... இப்படி வளரும் கதை. அதை அவள் சொல்கிறபோது, கிணற்றினுள் ஒளிரும் தாமரையை வர்ணிக்கையில் அவள் முகமே ஒரு தாமரைப் பூவாகிவிடும். ஒளி சுடரும் அவள் விழிகளில் சந்தோஷமும், அதிசய பாவமும், மின்னி மிளிரும், சிறு உதடுகள் பிரிந்து நிற்க, அப்புறம்? அப்புறம்? என்று கதை கேட்கும் ஆர்வ முகம... - அது அவனுள் நீங்காத நினைவு முகம். ஜீவனுள்ள தாமரைப்பூ.