பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 7 வல்லிக்கண்ணன் கதைகள் எல்லாம் சங்கடப்படுவதைவிட செத்துப் போவதே நல்ல துன்னு அடிக்கடி தோணுது, என்ன சாவு என்றும் தோணுது. மனசு கெடந்து புண்ணா உலையுது” என்றாள் அவள். தரையைப் பார்த்தபடி உட்கார்ந்து விட்டாள். அவளுக்குத் தன்னால் எவ்வித ஆறுதலுங் கூற இயலாது என்று அறிந்தவனாய், எந்தவித அனுதாபமும் அறிவிக்க சக்தி அற்றவனாய் உட்கார்ந்திருந்தான் -வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? பெண்களின் நிலைமை ஏன் இவ்வாறு இருக்கிறது? சமுதாயத்தில் பெண்ணுக்குத் த னி த் த வ ழ் க் .ை க இல்லை. ஆணைச் சார்ந்து தான் அவள் வாழ வேண்டியிருக்கிறது. இனிய கனவுகளோடும், சந்தோஷ எதிர்பார்த்தல்களுடனும் வாழ்வின் மலர்ச்சியில் துணைவன் ஒருவனோடு முன்னேற அடி எடுத்து வைக்கிற பெண்கள் அநேகரது ஆசைகள் கருகி விடுகின்றன. அவர்களது விருப்பங்களும், சந்தோஷங்களும் ஆண்களது போக்கினால் தீய்க்கப்பெறுகின்றன. பலர் ஏமாற்றங்களோடு, துன்பங்கள், வேதனைகள், அடி உதை கள், அவமானங்கள் குற்றச்சாட்டுகள், மற்றும் பல தண் டனைகளையும் அனுபவித்து அல்லல் உறுகிறார்களே, இதெல்லாம் ஏன்? “என்ன தம்பி, குருகுருன்னு உட்கார்ந்திட்டே? உன் னைப்பத்தி நான் கேட்கவே இல்லையே! எப்படியிருக்கிறே?’’ என்று அவள் விசாரித்தாள். அவன் பதிலளித்தான். ‘'நீ ஏன் இப்படி இருக்கிறே, உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்டு? எல்லாரையும் போல, நீயும் ஒரு கல்யா ணத்தைப் பண்ணிக்கிட்டு வீடும் வாசலுமா இருக்கலாமில் லையா? அதை விட்டுப் போட்டு, ஊர் ஊரா திரிஞ்சுக்கிட்டுஇதிலே நீ என்ன சுகத்தைக்கண்டே?” என்றாள் அவள்.