பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2 #8 'கல்யாணம் செய்துகொண்டு வீடும் வாசலு மாக இருந்து நீ என்ன சுகத்தையும் சந்தோஷத்தையும் கண்டு விட்டாய்” என்று அவளிடம் கேட்கவிரும்பினான். ஆனால், கேட்கவில்லை. உன் மகள்களின் வாழ்க்கை என்ன சுகமாக அமைந்தது? நமக்கெல்லாம் தெரிந்த எத்தனையோ பெண் கள், ஆண்கள் வாழ்க்கையில் என்ன சுகத்தைக் கண்டிருக் கிறார்கள்? இப்படி எல்லாம் பேச அவன் ஆசைப்பட்டான். ஆனால் பேசவில்லை. மனிதர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா - அர்த்தத்தைக் காண முடியுமா - தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் உண்டா என்று தேடிக் கொண்டு திரிகிறேன்’ என்றான். “நல்லா அலைஞ்சே போ!' என்றாள் அவள். கல் யாணத்தைப் பண்ணிக்கிட்டு, ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்தி, குழந்தைகளோடு வீடும் வாசலுமா இருப்பது தான் வாழ்க்கை. அதிலே கஷ்டங்களும், தொல்லைகளும் வருவது சகஜம், அதை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்கிறதுதான் வாழ்க்கையின் அர்த்தம். நீ என்ன புதுசாக் கண்டு பிடிக்கப் போறே இதிலே என்று சொன்னாள். "கொஞ்சம் இரு. காப்பி போட்டுக்கிட்டு வாரேன்' என்று எழுந்து உள்ளே போனாள். 'அக்கா, நீ பெண்மையின் சரியான பிரதிநிதிதான்' என்றி அவன் எண்ணிக் கொண்டான். அவன் பார்வை அந்தப் பெரிய வீட்டின் வெறுமையில் நீந்தியது. 口 "தினமணி கதிர் - 4- 11-1988