பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 24 அவன் பார்த்த பார்வையும், அவன் நின்ற நிலையும், அப்போது அவனுடைய கைகள்-கை விரல்கள் - முன் நீண்டு துடித்த துடிப்பும், அவன் அப்படிச் செய்யக் கூடிய வன் தான் என்ற நினைப்பை, அச்சத்தை, அவளுள் விதைத் தன. அவன் மீது அவளுக்கு உள்ளுற பயம் ஏற்பட்டது. அவனிடம் ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்தது. சஞ்சிதத்துக்கு அந்த ஊரும், வீடும், சுற்றமும் சூழ லும் பிடிக்காத விஷயங்களாக மட்டுமில்லாது, தன்னை ஒடுக்கி அடக்கித் தனது சந்தோஷங்களை சிதைத்து, தன்னு டைய வாழ்வையே பாழடிறக்கிற பாழ்நிலமாய்,படுகுழியாய், பயங்கர நரகமாய் தோற்றம் கொண்டன. துரத்து டவுனும், நாகரிகமும், உல்லாசப்பிரியர்களும், அவற்றுக்கும் அப்பால் தொலைதுார நாகரிகப் பெருநகரமும், சினிமா உலகமும் குளுகுளு பசுமைகளாய் புன்னகைத்தன. கண்சிமிட்டின. அவளுக்கு ஆசை காட்டின. அவள் இயல்பான சந்தோஷங்களை அனுபவிக்க முடி யாமல், கனவு இன்பங்களுக்காக ஏங்கி, நாட்களை ஒட்டலா னாள். பிறந்த வீட்டில் ஏதோ விசேஷம் என்று அவள் அம்மா வந்து ரஞ்சிதத்தைக் கூட்டிப்போனாள். பின்னர் வருவதாகக் குப்புசாமி சொல்லி அனுப்பினான். உழைப்பில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டி ருந்த அவன் சொன்னபடி போக முடியவேயில்லை. அப்புறம் போக வேண்டியது அவசியம் இல்லை என் றாகி விட்டது. ரஞ்சிதம் நாகரிக மன்மதன் ஒருவனுடன், அவன் பேச் சையும் சிரிப்பையும் ஆசை வார்த்தைகளையும் நம்பி, வீட்டை