பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 வல்லிக்கண்ணன் கதைகள் விட்டுப் போய் விட்டாள். இந்தச் செய்தி குப்புசாமிக்கும் அவன் ஊருக்கும் தெரிந்தது. பரபரப்பான பேச்சுக்கும் ஏச்சுக் கும் தூண்டுதல் ஆயிற்று, சிறிது காலத்துக்கு. ரஞ்சிதம் சினிமாவில் சேரத்தான் போயிருப்பாள்; அப்படி ஆசை காட்டித்தான் நாகரிக மைனர் அவளை கூட்டிக் கொண்டு போயிருப்பான் என்று குப்புசாமியும், அந்த ஊர்க் காரர்களும் நம்பினார்கள், அது தான் நிஜமும் கூட. நிஜமான சந்தோஷங்களை அனுபவிக்க மனம் இல் லாது, பகட்டி மினுக்கிய நிழல் இனிமைகளையே நாடி அலைந்த ரஞ்சிதம் என்ன ஆனாள்-அல்லது ஆவாள்என்று அந்த ஊர் கவலைப்படவில்லை. தன்னை விரும்பி நேசிக்க மனமில்லாது வெறுத்த அவளை தன்னவளாக அந்த ஊர் ஏற்றுக் கொண்டதில்லை தான். [그 செளராஷ்டிர மணி - 23-18-1984 வ. -15