பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக் கண்ணனைப் பற்றி... கடந்த நவம்பர் 12-இல் தம் எழுபத்தொன்றைக் கடந்த வல்லிக் கண்ணன், எத்தனை எத்தனையோ வாழ்க்கைச் சந்திப்புகளை - இலக்கியத் தேடல்களை - சமூகச் சித்தரிப்புகளைத் தனித்தன்மை வாய்ந்த எழுத்துத் தியானத்தால் கடந்து வந்திருப்பவர். அமரவேதனை தந்த கவிதைகள் ஒரு புறம், பாவேந்தரின் சீர்திருத்தக் கருத்துக்கள் மறுபுறம் என்று ஒர் ஆற்றல் மிக்க வாழ்க்கையை நடத்தலானவர், பல புனைபெயர்களின் பின் நடத்திய ஆய்வுகள் ஏராளம். புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற தரமானதோர் ஆய்வு. எத்தனையோ - கதைகளில் எத்தனையோ அலசல்கள்...! "அலைமோதும் கடல் ஒரத்தில்' என்ற இவர் புதினம், ஒர் அமைதியான நிலைநாட்டுதல். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன், நம் எழுத்துலகில் - இவர். - அ. பசுபதி, முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரி, புதுவை.