பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வல்லிக்கண்ணன் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்று உணர்ந்த பிறகு அவள் எதுவுமே பேசவில்லை. அவர் தன் கனசை மாற்றிவிட மாட்டாரா; பிரயாண ஆயத் தங்களை நிறுத்திவிடமாட்டாரா; இனி இங்கேயே இருந்து விடுவேன் என்று சொல்லமாட்டாரா என்று ஏக்கத்தோடு அவர் முகத்தைப் பார்த்தபடி அங்கேயே வளையவந்தாள். தனது உற்சாகம், கலகலப்பான சுபாவம் அனைத்தையும் இழந்தவளாய் காட்சி அளித்தாள். அவள் அந்த அறையிலேயே குப்புறடித்துக் கிடந்து அழுதுக்கொண்டே இருப்பாள் என்று அவர் பயந்தார். ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. அவள் முகம் களை இழந்து காணப்பட்டது; குறும்புப்பேச்சும் துள்ளலும் துடிப்பும் அவளிடம் காணப்படவில்லை. இவையே பத்மா விடம் வெளிப்படையாகத் தென்பட்ட மாறுதல்கள். அவளது சின்னஞ்சிறு உள்ளத்தில் எத்தகைய உணர்ச்சிக் குமை தல்கள் நிலவினவோ- யாருக்குத் தெரியும்! அன்று இரவு, பத்மா, நான் இருட்டோடு கிளம்பிப் போய்விடுவேன் அப்போ நீ தூங்கிக் கொண்டிருப்பாய். அதனால் இப்பவே சொல்லிக் கொள்கிறேன். நான் போயிட்டு வாறேன். உன் நினைவு எனக்கு எப்பவும் இருக்கும் என்று சொக்கலிங்கம் பிரிவுபசாரம் கூறினார். அவள் 'உம்'மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்றாள். பிறகு, திடுமென்று அங்கிருந்து ஒடி மறைந் தாள. அப்புறம் அவர் பார்வையில் அவள் தென்படவே வில்லை. z அதிகாலை வேளை, நாலரை மணி. இருட்டு. குளிர் காற்று, பனி கடுமையாகப் பெய்திருந்தது. -