பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவளும் சின்னவளும் 105 வும் இருக்கலாம். காரணம் எதுவாக இருப்பினும், சின்னவள் வாயைத் திறந்து விட்டால், பெரியவளுக்கு எரிச்சலும் கோபமும் தான் பொங்கி வரும். சதா வாயடி அடிக்கிற சின்னவளை ஒரு சமயமாவது வாய் மூடச் செய்து, திகைப்பில் ஆழ்த்தி விட வேண்டும் என்ற எண்ணம் அக்காளுக்கு. அதற்கு ஒரு சக்தர்ப் பத்தை எதிர் நோக்கி இருந்தாள் லக்ஷ்மி. புதிதாக ஒரு கதையைப் படித்ததும், சின்னவளுக் குப் புத்தி கற்பிக்க இது உதவும் என்ற மகிழ்ச்சி பிதக் த்து பெரியவளுக்கு. உடனேயே உற்சாகமாகக் கத்தி னுள் சரோஜா. ஏட்டி, ஏ. சரோஜா' என்று. சரோஜா ஏதோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தாள். சும்மா உட்கார்த்து கனவுதான் கண்டு கொண்டிருக்கட் மே! பிறர் கூப்பிட்ட உடனேயே துள்ளிக் குதித்து இடி வரும் வழக்கம் அவளிடம் கிடையாது. இப்பொழுதும், இயல்புப் பிரகாம் 'என்னேய்' என்று குரல் மட்டும் கொடுத்தாள் அவள். ‘அடியே, இங்கே சித்தெ வாயேன்! என்று கூவினுள் அக்காள். தங்கச்சி சிணுங்கிளுள் எனும்' என்று. அக்காளுக்கு எரிச்சல் பிறந்தது. கூப்பிட்டதுமே அக்தச் சின்னமூதி எழுந்து வரவில்லையே என்று தான். எந்தப் பெரியவருக்கும் எழக்கூடிய எண்ணமும் உணர்ச் சியும் தான் இது. ‘ஏ மொட்டைக் கடா அங்கே என்ன தான் செஞ்சுக்கிட்டு இருக்கிறே? கூப்பிட்டால் எழுந்து வர முடியலியோ என்று கத்தினுள் லக்ஷ்மி. சரோஜா முழு மொட்டை அல்ல. கிராப்பு. மாதிரி வெட்டி விடப்பட்டிருந்தது தலைமுடி, அழகுக்காகக்