பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, லைக்கரைப்பட்டிப் பண்ணே யார் வெயிலுகந்த மூ நாத பிள்ளை கால் மேல் கால் போட்டு கம் பீரமாக உட்கார்ந்திருந்தார். அவ்விதம் அட்டனக் கால் போட்டுக் கிண்ணையிலமர்ந்துதெருவிலே போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பதில் அவருக்கு எப் பொழுதுமே தனிமகிழ்வு. அதுவே அவரது பொழுது போக்கு. அதுதான் அவர் வேலை. அவருக்கு வேறே என்ன வேலையிருக்கு' என்று பலரும் சொல்வது உண்டு. அதிலும் உண்மை இருக்கலாம். - பொண் ணுப் பிறந்தவங்க தெருவிலே போக நீத மில்லையம்மா. எப்ப பார்த்தாலும் செக்கடிப் பிள்ளையார் மாதிரி திண்ணையிலே உட்கார்த்து கொண்டு, போறவங்க வாறவங்களே முழிச்சுப் பாக்கிறது. சிலசமயம் பல்லக் காட்டி இளிக்கிறது என்பது அவ்வூர்ப் பெண்களின் பொதுவான குறைபாடு. அவர் அப்படிப்பல்லிளிப்பது தான் தங்கப்பல் கட்டி யிருக்கிற பெருமையைக் காட்டத்தான். வேறே வித்தி யாசமாக ஒண்னும் நினைக்கவேண்டியதில்லை என்று சிலர் சொல்வது உண்டு. ஆனலும் அவர்கள் மனசுக்கே தெரி யும், இது வெறும் பூச்சுமான வேலை, பெண்கள் பேச்சில் தான் உண்மை இருக்கிறது' என்பது. பண்ணையார் வெயிலுகந்தகாதர் ஒரு மாதிரியான ஆசாமிதான். பணமும், சுகவாழ்க்கை வசதிகளும், போகாத பொழுதும் கிறைந்திருக்கும் பொழுது பண்ணே யார் மகன் பண்ணே யாராக வந்தவர் வேறு விதமாக வாழ விரும்புவார் எ ன் று எதிர்பார்ப்பது தவறில்லையா?