11 அன்றொருநாள், இமாலயத்தில் உருத்திரன் பார்வ தியை மணங்கொண்டபோது, அத்திருவிழாவைக் காணத் திரண்ட பெருங்கூட்டத்தினரால், வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததாம். தெற்கைச் சமஞ்செய்ய உலக முதல்வன், குறுமுனி என வழங்கும் அகத்தியனைப் பொதிகை மலைக்குப் போயுறையும்படி அனுப்பிவைத்தா அந்தப் புராணக் கதை பிறந்த நாள் முதலாகவே தெற்கு உயரா தபடி வடக்கு கவனித்து வந்திருக்கிறது என்பது விளக்கமாயிற்று. மை. நீக்க கூறுவது புராணக் கதைகளின் போக்கிலே உள்ள குறைகளை அவற்றிற்குத் தத்துவப் பொருள் வழக்கம். அதுபோன்றே, இந்த அகத்தியர் வருகைக் கான காரணங் கூறும் கதைக்கும் உட்பொருள் காண் போமேயானால் ஒருண்மையும் தெளிவாகும். அக்காலத்தில், தென்னாட்டில் வாழ்ந்த மக்களும், மனனரும் வடக்கிலும் செல்வாக்குடன் புகழ்பெற்று விளங்கினர். அந்நிலையில், அந்நிலையில், வடக்கில் நிகழ்ந்த அப்பெரு மணத்தில் திரண்ட வடவர், தமது நாடும் மொழியும் தெற்கின் பெருமைக்குத் தாழ நேருகிறதே என்று கருதிக் கூடிச் சிந்திக்கலாயினர். அதன முடிவாகத், தெற்கு தனது மொழி, கலை நாகரிகப் பெருமையாலேயே வடக் கைத் தாழச் செய்வதால், அதன் பெருமையைப் போக்கும் முறையில் வடவரின் மொழி கலை நாகரிகத்தைத் தெற்கில் புகுத்தி, அதன் மூலம் வடக்கினைத் தாழாமல் உயரச் செய்யவே, கலைக்கடலெனப் பெயர்பெற்ற அகத்தியனை அனுப்பிவைக்கத் தீர்மானித்தனர். ஓர் இனத்தை வெல்ல விரும்பினால், அந்த இனத்தின் மொழியையும் கலையை யுமே முதலில் அழிக்கவேண்டும் என்ற கருத்தினை அக்காலத்திலேயே கண்டனர் போலும் வடவர்! அந்த அகத்தியரும், கலை வளமும் நாகரிக நலமும் நிரம்பிய தென்னாட்டிற்குச் செல்கிறோமே, அவர்தம் மொழியை அறியாது எப்படித் தம் கருத்தைப் பரப்புவது என் றெண்ணி, இறைவனை வேண்டித் தமிழ் அறிந்தனர் போலும், வாணிபத்திற்குப் புறப்படுபவன், செல்லும்
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை