பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பல திறப்பட்டன. அவற்றுள் சில மொழிவளங் காட்டவும், சில தமிழர் நெறி புலப்படுத்தவும், பல சமயக் கருத்துப் பரப்பவும் தோன்றியுள்ளன. வடமொழியில் வரையப்பட்ட ஆத திகாவியங்களான, வான்மீகி இராமாயணமும், வியாச பாரதமும் புகழப்பட்ட போதே, தமிழிலேயும் தமிழருக்குப் பெருமைதரும் காப் பியம் உண்டு என்பதை நிறுவ, சேரர் பெருந்தகை இளங்கோவடிகள், தமிழரின் ஒப்பற்ற வீரமும் ஆற்றலும், இணையற்ற நாகரிகமும் பண்பாடும். ஈடற்ற மொழிவள னும் கலைச்செல்வமும் ஒருங்கே விளக்கமுறும்படி, முத் தமிழ் முழங்கும் "சிலப்பதிகாரம்" என்னும் காப்பியத்தை இயற்றித்தந்தனர் போலும். அதன் வழியில் தோன்றிய காவியங்களான, மணி மேகலை, பெருங்கதை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி முதலியவை, தமிழ்க் கலை வளத்தினைப் பெருக்கி, மொழிக்கு ஆக்கம் நல்கினும், தமிழரின் தனிப் பண்பாட்டைக் காக்கத் தவறிவிட்டன. மதச்சார்புடையன வாகவே அக்காவியங்கள் அமைந்ததால், பொதுமை இழந்து பொய்மை நிரம்பின. பின்னர், சமண சாக்கியக் கொள்கைகளோடு மாறு கொண்ட சேக்கிழார், தம் மதமாகிய சிவநெறியே உயர்ந் தது என்ற கருத்தைப் பரப்ப, அறிவுக்கு ஒவ்வர்விடினும். பல கதைகளைத் தென்னாட்டிற்கே உரியதாகப் புனைந்து பெரிய புராணமாக இயற்றிவிட்டனர். சிவநெறி செல்வாக் குப்பெற்றது கண்ட வைணவர் தம் மதம் பரவ ஒரு காப்பி யம் வேண்டுமென விரும்பினர். கம்பர் இயற்றினார் இரா மாயணம். அவரது கவிதை யாற்றல் காவியத்திற்கு மேலும் அழகு தந்தது. ஆனால், இந்தப் போக்கில் காவியங் கள் வளரலாயின; கந்தபுராணம், திருவிளையாடல், வில்லி பாரதம், தலபுராணங்கள் என்று பட்டியல் வளர்ந்தது. தமிழ் மொழியின் பெருமையை விளக்க இயற்றத் தொடங்கப்பட்ட காப்பியம், சமயத்தையும் புகுத்துவதாக வளர்ந்து, சமயத்திற்காகவே காப்பியம் என்றாகிச் சமயத்