பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திற்காக சமஸ்கிருத இலக்கியத்தை அப்படியே தமிழில் இறக்கிவிடுவது என்பதாயிற்று நிலைமை. இறுதிக்கட்டம் வரையில் தமிழ் மொழியின் தனிமை (உரிமை) காக்கப்பட வேண்டும் என்ற கருத்து மட்டும் கவிஞர்களிடம் இருந்தே வந்தது. கொள்கை பிற்காலத்தில் பக்தித் துறையில தோன்றிய பாடல் களும் பாசுரங்களுமோ - தமிழரின் வாழ்வுக் களையே கைவிட்டு, வடவரின் வெறுப்புத் துறவைப் போற்றத் தொடங்கின. மண், பொன், பெண்-என்ற இம் மூவாசைகளை ஒழிக்கவேண்டும்: இந்த வாழ்வே பொய், என்ற இத்தகு ஆரியக்கொள்கைகள் செல்வாக்குப் பெ விடினும், மக்களிடம் பரவலாயின. மண், பொன், பெண் ஆகிய இவற்றிலே, சாதாரண ஆசைகூட அல்ல. பேராசை வைத்திருந்தவர்களேகூட இந்தக் கருத்துக் களைத் தாம் கடைப்பிடித்துள்ள தாகக் கூறி நடிக்கலாயி நடிப்பிலே வளர்ந்த துறவுக் கொள்கைகள் நடிப் னர். பையே வளர்த்தன. இந்நிலையில், கோவில்களில் வடமொழி மந்திரங்களும் தோத்திரங்களும் வழங்குவதை மக்கள் விரும்பவில்லை என்பதைக் கண்ட சமணரும், பின்னர் வைணவரும் வட மொழியும் தமிழும் சம அளவாகக் கலக்கும்படியான் மணிப்பிரவாள நடையைக் கைக்கொள்ளலாயினர். சமய உணர்ச்சி, தமிழை வழக்கிலும் கூடப் பாதி அளவே உயிருடையதாக ஒடுக்கவும் செய்தது. பின்னரே-வைண வக் கோவில்களில் தமிழ் மொழிப் பாசுரங்கள் இடம் பெறலா யின. எப்படியோ. அக்கோவில்களிலேனும தமிழுக்கும் இடமளித்தமைக்கு நன்றி செலுத்த வேண்டியதுதான் ! எனினும் சமயவாதிகள், மொழியினைக் கையாண்ட முறைகளால், பலநூற்றாண்டுகளாகவே தமிழ் மொழி கலை நாகரிகப் பண்பாடுகள் குழப்பத்திற்காளாகிவிட்டன. மக்கள் தெளிவற்றவர்களாயினர். அன்றொரு நாள் தென் குமரி முதல் வட இமயம்வரை பரவிக்கிடந்த தமிழ் மொழி, விந்தியம் வரையில் கூட