பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 "மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது வருணச் சிரமமெனு மயக்கமுஞ் சாய்ந்தது" 'குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்து வீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து நிற்கின்றார்......" - எனவும், - எனவும், "சதுமறை ஆகம சாத்திர மெல்லாஞ் சந்தைப் படிப்பு நஞ் சொந்தப் படிப்போ" - எனவும், "தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாருஞ் சேர்கதி பலபல செப்புகின் றரும் பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச் சம யாதியை மெச்சுகின்றாரும்" - எனவும், வரும் இடங்களையும், மற்றும் பல பாக்களில் வரும் அத்தகு கருத்துக்களையும் காண்பவர்கள் அவரது ஆரியக் உணர்வர். கண்டனத்தை அதுவே - சமயச் சீர் திருத்தமாகச் சமரச சன்மார்க்கமாகப் பொதுநெறியாக உருக்கொள்ளலாயிற்று. அடுத்து, இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் திகழ்ந்த அறிவுநூல் பேராசிரியர், சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றித் தந்த நாடக இலக்கியமாகிய "மனோன்மணியத் தின் " தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தாகப் பாடப்பெற்ற தமிழ் வாழ்த்தே, வடமொழியினும் தமிழே எவ்விதத்தி னும் உயர்ந்தது, என்ற கருத்தை முதன் முதல் மக்களிடம் பரப்பியதாகும். அப் பாடலே கீழ் வருவதாகும்: "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்