24 தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழ் பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் அணங்கே! துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும் உன்னுதரத்(து) உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆ ரியம்போல் உலக வழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே ! " ஆம், இப்பாடலே, தமிழின் பெருமையையும், வட மொழி பாடை ஏறினமையையும், எவரிடமும் மார் தட்டிக் கூறும் உறுதியைத் தமிழ்மக்களுக்கு அளித்தது எனலாம். C மேலும், அதே காலத்தில் வெளிவந்த, யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் அவர்கள் இயற்றிய திராவிடப் பிரகாசிகை' என்ற இலக்கிய வரலாற்று நூலும் “Dravidic Studies" (திராவிட ஆராய்ச்சிகள்) என்ற வெளியீடும், Ancient Dravidians, (பண்டைத் திராவிடர்), Pre-Aryan Tamil Culture (ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரிகம்) முதலான பல வரலாற்று ஏடுகளும், பரிதிமாற் கலைஞன் இயற்றிய தமிழ்மொழி வரலாறு முதலிய மொழி ஆராய்ச்சி ஏடுகளும்- நாளடைவில், தமிழர் உணர்ச்சி யிலேயே - தாம் திராவிடர் என்ற எண்ணத்தை வளர்த்து வந்தன. ஆரிய மொழி, கலை, நாகரிகம் எதற்கும் இனியும் இங்கு இடந்தருதல் கூடாது என்ற எண்ணமும் அத் துடன் வலிவு பெற்று வரலாயிற்று.
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை