பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 29

இப்படிப்பட்ட பல காரணங்களாலும் தஞ்சையில், 1920-ல் நடைபெற்ற மாகாணக் காங்கிரஸ் மாநாட்டிலேயே வகுப்புரிமை தலையெடுக்கலாயிற்று. காங்கிரஸ் கட்சி நிருவாகத்திலேயே 50-விழுக்காடு இடங்கள் பார்ப்பன ரல்லாதாருக்கென ஒதுக்கப்பட வேண்டும் என்று ஈ. வே. ரா.கேட்கத்தொடங்கினார். அடுத்த ஆண்டுகளில் நடை பெற்ற மாகாண மாநாடுகளிலும், தமது தீர்மானத்தை வலியுறுத்தி வரலானார். அவ்வப்போதும், பார்ப்பனத் தலைவர்கள், திரு. ஈ.வே.ராவுடன் எப்படியோ சமா தானம் செய்துகொள்ளலானார்கள். . 1924-ஆம் ஆண்டில், திருவண்ணாமலையில் நடந்த காங்கிரசிற்குத் திரு. FF. வே.ரா. தலைமை வகித்தார். அவர் தமது தலைமை யுரையிலேயே, "பார்ப்பனர், அல்லா தார் வேற்றுமை யுணர்வு தோன்றுவதற்கு அடிப்படை யான காரணங்கள் இருத்தல் வேண்டுமெனவும், காங்கிரஸ் வாதியாயிருந்த டாக்டர் டி. எம். நாயர் அவர்கள் திடீ ரென ஒரு கட்சியைத் தோற்றுவிக்கக் காரணங்களாய் நின்றவைகள், இன்னும் நிற்கின்றனவர் இல்லையா என் பதை நேயர்கள் கவனிப்பார்களாக எனவும், அக்காரணங் கள் அழிந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை எனவும் கூறியுள்ளார். அதற்கு முன்னும் நிகழ்ந்தது போலவே, செயற்குழுவில் அத்தீர்மானம் வரும்போது, நடை முறையில் அவ்வாறே கவனித்துக் கொள்ளலாம், வெளிப்படையாக எழுத்தில் வரவேண்டாம், அது நல்ல தல்ல என்று சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் முதலியவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டே, அத்தீர் மானம் கைவிடப்பட்டுள்ளது. ஒப்புக்கேனும், ஒப்புக்கேனும், தீர்மானத் தின் கருத்து (உயிர்) ஒப்புக் கொள்ளப்பட்டது, வடிவம் (உடல்) மறுக்கப்பட்டிருப்பினும் கூட. அதன் இதற்கிடையில் 1922-ல் சுயராஜ்யக் கட்சி தோன்றி வளரலாயிற்று. அக்கட்சி தேர்தலில் ஈடுபடும் எனக் கண்டு பார்ப்பனர்கள் அதில் புகலாயினர். மேலும் தேசீயக் காங்கிரசையே, தேர் தலில் ஈடுபடும் தனது திட் டத்திற்கு இசையச் செய்யும் என்பதும் புலனாயிற்று. எனவேதான் 1925-ஆம் ஆண்டில், காஞ்சியில், திரு.வி.க.