பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சுயமரியாதை இயக்கம் சூறாவளியாயிற்று, புயலாயிற்று, இடியாயிற்று, பெருமழையாகக் கொட்டிற்று. அதனை எதிர்த்துப் புரோகிதம் அதற்குப் பழக்கமான அவ்வளவு தந்திர மந்திரங்களையும் நயவஞ்சக நரிச் செயல்களையும், யாண்டுதான் பார்த்தது. நரியின் ஊளை ஒலி கேட்டா இடி முழக்கம் ஓய்ந்து விடும்? பகுத்தறிவுப் பெருமழையினில் வை தீகப் புழுதிமேடு கரையாமல் எப்படித் தப்பும் ? சபை பின்னர் 1926-ஆம் ஆண்டில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை ஏற்றுத் தேர்தலில் ஈடுபட்டது. பெருவாரியாக வெற்றியும் பெற்றது. மந்திரி அமைக்க இசைவது மில்லை, அமைப்பவர்களுடன் ஒத் துழைப்பதுமில்லை என்று- முதலில் பொதுமக்களிடம் கூறிய கொள்கைக்கு மாறாக நடக்கலாயினர். தம்மில் இருவருக்கு அமைச்சு அளித்த சுயேச்சை மந்திரிசபை யுடன் ஒத்துழைக்கலாயினர் காங்கிரஸ் கட்சியார். அக் கட்சியில் உறுப்பினராக இருந்த திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள், அதுகண்டு, சென்னைமாகாணச் செயற் குழுவில் அந்தக் குற்றத்தை எடுத்துக் கூறியும் பயனின்மையால், 1927-ல் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தின் போது, சென்னை காங்கிரசின் நாணய மற்ற போக்கைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு சென் றனர். அக்காலக் காங்கிரஸ் தலைவர் எஸ். சீனிவாசய்யங்காரின் தந்திரத் திட்டத்தின்படி, அத்தீர்மா னம் மறைக்கப்பட்டு விட்டது. அச்செயல் கண்டே, திரு. எஸ்.முத்தையா அவர்கள் 1927-ஆகஸ்டில், காங்கிரஸை விட்டு வெளியேறினார். பின்னர் சட்டசபையிலேயே ஒரு தனிக் கட்சியும் அமைத்தார். காங் அவர் விலகியதன் நியாயத்தை, திரு. வி. க. அவர் களின் வாழ்க்கைக் குறிப்பும் உணர்த்துகின்றது. கிரஸ் தனது முன்னாள் வாக்கினின்றும், கொள்கை மாறிச் செல்லும் போக்கைக் கண்டே, திரு. வி. க. அவர்களும் 9-7-1926-ல் காங்கிரஸ் மாகாணச் செயற்குழுவினின் றும் விலகிக் கொண்டதாகக் கூறியுள்ளார். அவ்வாறு தனிக்கட்சித் தலைவராக இருந்த வழக்கறிஞர் முத்தையா அவர்கள்,டாக்டர். சுப்பராயன் அவர்கள் தனது முதல்