பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புகழ்மிக்க காந்தி அடிகளைத் தலைவராகப் பெற்றதாலும், பத்திரிக்கை எதிர்ப்பாலும், பார்ப்பனர்களின் கட்டுப் பாட்டாலும், நீதிக்கட்சி செல்வாக்கை இழந்துவரத் தலைப் பட்டது. கம்யூனல் ஜி.ஓ.வுக்குக் காரணமாக இருந்த நீதிக் கட்சியை வீழ்த்துவதே இலட்சியமாகக் கொண்ட பார்ப் பனர், தேசீயப் போர்வை போர்த்து, விடுதலை இயக்கத் தின் பேரால் பதவி பதவி வேட்டையாடத் தொடங்கினர். சமூக நீதிக்காகவே உள்ள கட்சி, அத்தாக்கு தலை எவ்வ ளவு காலத்திற்குத்தான் தாங்க முடியும்? ஆனால் சுயமரி யாதை இயக்கமோ, மக்களின் உள்ளத்தைக் கிளறும் உணர்ச்சியோடு, பலவித தொல்லைகட்கும் எதிர்ப்புகட்கும் இடையில் வளர்ந்து வரலாயிற்று. இந்நிலையில் 1937-ல் நடைபெற்ற தேர்தலில் - காங் கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரியின் மந்திரி சபையும் ஏற்பட்டது. முன் னர் 1921- முதல் 26-வரை நீதிக்கட்சி ஆட்சிசெய்த காலத் தில், கல்லூரிகளில் எல்லா வகுப்பு மாணவர்களும் இடம் பெறும் பொருட்டுக் கல்லூரிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை செயலாற்றி வந்தன. அதனால் தான், ஓரளவேனும் பிற்பட்ட மக்கள் கல்லூரிகளில் இடம் பெற இயன்று வந்தது. கம்யூனல் ஜி. ஓ.வின் விகிதாச்சாரம் வெளிவந்த பின்னர், கல்லூரிக் குழுவினரும் இயன்ற அளவில் அந்த முறையையே பின்பற்றி வந்தனர். ஆச்சாரியார் ஆட்சி ஏற்பட்ட உடனேயே தமது இனத்துக்கு உயர்வு தேடத் திட்டமிடலானார். கம்யூனல் ஜி. ஓ.வில் கை வைப்பது ஆபத்தாகும் என்று கண்டு கொண்டதால், அதற்கொரு துணையாக, பாய்காலாக உள்ள கல்லூரிகளில்; மாணவர் நுழைவைப் பங்கிடுகின்ற கல்லூரிக் குழுக்களை ஒழித்துக் கட்டினார். அவரது வகுப்பார் கல்லூரிகளில் விருப்பம் போல் இடம்பெற வழிகண்டார் முதலில். அடுத்து உயர் பதவிகளில் தமது இனத்தவராகத் தேடி அமர்த்தும் தொண்டையும் செய்யத் தவறவில்லை. து. மேலும், தமது இன ஆட்சி என்றும் நிலைக்க அவசிய மான தேசீய வெறியை வளர்த்து, மக்களை அடிமைப்