லெல்லாம் 35 படுத்தத்தக்க வழி எதுவெனக் கருதி, வடவர் மொழி யான இந்திக்கு ஆதிக்கம் தேட முனைந்தார். பள்ளிகளி இந்தி நுழைந்தது. பிள்ளைகளுக்குக் கட் டாய பாடமாக்கப்பட்டது. பள்ளிகளில் பயின்ற தமிழ்ச் சேய்கள் பருகிய அறிவமுதில், ஆதிக்க மொழி என்னும் நஞ்சு கட்டாயமாகக் கலக்கப்பட்டது. உண்மை உணர்ந் தவர் நெஞ்சு பதறினர். இந்திக் கட்டாயம், கூடாது என ஆர்த்து எழுந்தனர். . தனித் தமிழ்த் தந்தை மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈழத்துச் சிவாநந்த அடிகள் ஆகியோர் இந்தியைக் கட்டாயப்படுத்துவதை மிக வன் மையாகக் கண்டித்தனர். அறப்போர் தொடுத்தேனும் இந்தி ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும் என்ற முழக்கமும் எழுந்தது. அதை ஆதரித்து, பல்கலைப் புலவர். கா. சுப் பிரமணிய பிள்ளை, கரந்தை, தமிழவேள், உமாமகேசுவர னார்,சர். கூர்மா வேங்கடரெட்டி நாயுடு முதலியவர்களும், திருமதி. நீலாம்பிகையார் முதலிய தாய்மார்களும் முழங்க லானார்கள். மக்கள் ஆர்வத்தையும், அறப்போரின் அவ சியத்தையும் உய்த்துணர்ந்த தலைவர். ஈ.வே.ரா, தளபதி சர்.ஏ.டி. பன்னீர்ச் செல்வம், அறிஞர் அண்ணாதுரை, தமிழ் வீரர் கி. ஆ. பெ. விசுவநாதம், அஞ்சா நெஞ்சர் அழகிரிசாமி, தமிழ்க் காவலர் செ. தெ. நாயகம் முதலிய பலரும் கட்டாய இந்தியை எதிர்த்து எச்சரிக்கலானார்கள். தமிழ்த் தெனறல் திரு. வி. க. அவர்களும் ' இந்திக் கட் டாயம் வேண்டாம்! இதில் பிடிவா தம் கூடாது" என ஆச் சாரியாருக்கு நல்லுரை நவின்றார். எச்சரிக்கையோ, நல் லுரையோ பலனளிக்கவில்லை. அறப்போரைத்தவிர வேறு வழியே இல்லை. போர் முரசும் முழங்கப்பட்டது. தாய்மார்களும் தளபதிகளும் முன்னின்று, ஆயிர மாயிரம் வீர இளஞ்சிங்கங்களைப் படை திரட்டிப் போர் தொடுத்தனர். திருச்சியினின் றும், வீரர் அழகிரிசாமி தலை மையில் மொழிப் பாதுகாப்புப் படை படை ஒன்று புறப்பட்டு ஊரெங்கும், வழி நெடுக உணர்ச்சியூட்டிக் கால் யாகவே சென்னை வந்தடைந்தது. கிழவரும் பெண்களும் கூடஅணி அணியாகக் கலந்து கொண்டனர். அரசாங் நடை
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை