37 திமிர் வா தங்களைக் குறைத்துக் கொள்ளலானார். மண்டை கர்வம் மிகுந்த, அகம்பாவங்கொண்ட காங்கிரஸ் எதேச் சாதிகாரம் அதனின்றும் சாய்ந்து, சரிந்து சமத்துவ மண் ணிலே வீழ்ந்தது, அம்மொழிப் போரின் விளைவாக. ஆச் சாரியாரின் அமைச்சர் குழுவும் ஆட்சியைக் கைவிட்டு விலக நேரிட்டது. அந்த அறப்போரில் ஈடுபட்டுச் சிறைப்பட்டிருந்த போதுதான் தலைவர் ஈ. வே.ரா அவர்களின் செல்வாக்கு மிகவும் வளர்ந்தது. அதை உணர்ந்த நீதிக்கட்சியார், அவரையே தமது கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுத் தனர். இடைக்காலத்தில் சுயமரியாதை இழந்திருந்த நீதிக்கட்சி, சுயமரியாதை பெற்றது. அதுகாலைச் செல்வர் சிலருக்கு ஓய்வு நேரப் பணி புரியும் உப்பரிகை ஆகிவிட் டிருந்த நீதிக்கட்சி, பொதுமக்களின் உழைப்பினால் உரு வாகி வளரும் பொதுமன் றமாக விளங்கலாயிற்று. அப்பொழுது நிகழ்ந்த பெண்கள் மாநாட்டில்தான், தமிழர் தலைவர் அவர்கள், ஈ. வே. ரா பெரியார், எனப் போற்றப்படலானார். செயற்கரிய செய்தவரைப் பெரியார் எனப் போற்றியது தமிழ் நெஞ்சம். இந்தி எதிர்ப்புப் போர்க் காலத்தில், இயக்கத் தொண்டில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் தான் தோழர்கள் சிந்தனைச் செல்வர் சி. பி. சிற்றரசு அவர் களும், செயல் வீரர் என். வி. நடராசன் அவர்களுமாவர். நடைபெற்றபோது, - அறப்போர் 1938 ஆம் ஆண்டில், வேலூரில் நடைபெற்ற ஒரு தமிழர் மாநாட்டில் தலைமை வகித்த, சர்.ஏ.டி.பன்னீர்ச்செல்வம் அவர்களே முதன் முதல் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழக்கிய வராவர். அடுத்த நாள் சென்னையில் நடந்த, தெ. இ. ந. சங்க மாநாட்டிற்கென எழுதப்பட்டிருந்த பெரியாரின் தலைமையுரையிலும் அம்முழக்கம் காரணங்கள் காட்டி வலி யுறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்பே, அம்முழக்கம் தமிழ்நாடெங்கும் பரவி, மக்கள் உள்ளத்தில் இடம்பெற லாயிற்று. 3
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை