39 நீதி எனபது தமிழரைத் தாழ்த்தும் வழி என்பவை விளக்கப்பட்டன. தமிழ் மொழியினின் றும் கிளைத்த மொழிகளான, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற் றைத் தாய்மொழியாக உடையவரும் திராவிடரே. அவர் நாகரிகப் பண்பாடும், திராவிடமே. திராவிடர் இந்துக்களல்ல. இந்து ஒரு மதமுமல்ல, தென்னாட்டவருக்கு உரிய பெயரும் அல்ல என்னும் கருத்துக்களும் வலியுற லாயின. களது 1940-ஆம் ஆண்டில், திருவாரூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில், 'நாம் இந்துக்களல்ல வாகலின், இனித் திராவிடர் (தமிழர்) என்றே குறிப்பிடவேண்டும்' என்னும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், "திராவிட மக்களின் உரிமையைப் பாது காக்க, டில்லி ஆதிக்கத்தினின்றும் (தொடர்பினின்றும்) விடுதலைபெற்று, திராவிடத் தனிநாடு காணவேண்டும் ” என்பதும் உறுதிபெற்றது. திராவிடமக்கள், தமக்கிடையே மொழிவழியில் தனித்தனி நின்று, தனித்தனி மாநில ஆட்சிகொண்டு, இனமுறையால் ஒன்றுபட்டு, ஒரு நாட்டு மக்களாகக் கூட்டாட்சி காணவேண்டும். அவ்வாட்சி, திராவிடத்தின் இயல்பிற்கேற்ப, சுதந்திர, சமதர்ம, சமத் துவக் கூட்டாட்சியாக அமையவேண்டும். மொழிவழியால் தமிழர்களாகவும், இனமுறையால் திராவிடர்களாகவும் உள்ள நாம், ஐக்கிய திராவிடத்தின் விடுதலைக்குப் பாடு படுவதே பயனுள்ள தாகும். என்பன, அம்மாநாட்டின், தலைவர் பெரியார், வெளியிட்ட கருத்துக்களாகும். இயற்கை அமைப்பையும், வரலாற்றுச் சான்று களையும், அரசியல் ஆதிக்கத்தையும், நாட்டு மக்களின் துன்ப வாழ்வையும், ஆரியர் பெறும் செல்வாக்கையும், வடநாடு தென்னாட்டைச் சுரண்டிக் கொழுப்பதையும், பிழைப்புத் தேடி வெளியேறும் திராவிடர்கள் வேற்று நாடு களில் வதைபடுவதையும், பிழைப்புக்காக இங்கு புகும் வேற்றார் பெருஞ் செல்வராகத் தழைப்பதையும், எண்ணிப் பார்த்து, ஒப்புநோக்கிச் சிந்தித்தே 'திராவிட நாடு திரா விடருக்கே' என்ற உரிமைக்குரல் எழுப்பப்பட்டது.
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை