40 'திராவிட நாடு' ஒரு தனியாட்சி நாடாவதே, இயல் பாகவும் எளிதாகவும் நிகழும் என்பதோடு, அதுவே தமிழுக்கும், தமிழருக்கும், திராவிட இனத்திற்கும், ஒப் பற்ற அரணுமாம் தமிழ் என்பதும் தெளிவாயிற்று. நாடு தமிழருக்கே" என்ற வைரக்கல் வைத்து இழைத்த தங்கப் பதக்கம் ஆயிற்று, "திராவிடநாடு திராவிடருக்கே" என்னும் முழக்கம். தமிழ் மக்கள் அரசியலில் தனி நாடு உணர்ச்சி கொள்ளத் தொடங்கிய அதே காலத்தில், மொழி, கலைத் துறைகளிலும் 'மறுமலர்ச்சி' விளையலாயிற்று. தமிழ் நாட்டில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் தெலுங்குக் கீர்த்தனங்களே பெரும்பான்மையாகப் பாடப் பட்டுத் தமிழ்ப் பாட்டுக்கள் சிறுபான்மையாக அதுவும் துக்கடாக்களாகவே பாடப்பட்டு வந்தன. தமிழர்கள் இசை யினைக் கேட்டு இன்புற வகையின்றியே இசை விருந்து கள் நடைபெற்றுவந்தன. இசை அரங்கெல்லாம், தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் இழிவு செய்வதாகவே அமைந்தன. அந்நிலையை மாற்றி, இசை அரங்குகளில் பெரும் பகுதியும் தமிழ்ப் பாடல்களே பாடப்பட வேண்டும் என்ற கருத்தைச் சுயமரியாதை இயக்கம் பல ஆண்டு களாகவே. கூறி வந்திருக்கிறது. எனினும் 1940-ஆம், ஆண்டில்,வள்ளல். அண்ணாமலையார், தமிழிசை இயக் கத்தைத் தோற்றுவித்தபோதுதான், இசை அரங்கு களில் அக்கொள்கை இடம் பெறத் தொடங்கியது. தமிழர்கள், தமிழிசை வேண்டும் என்று விரும்பினால் அதை நிறைவேற்றுவதற்குக்கூட ஓர் இயக்கம் தேவைப் பட்டது, மான உணர்ச்சி மங்கியுள்ள இந்நாட்டில். அவ் வியக்கத்திற்கும் எதிர்ப்பும், பகையும் தோன்றாமலில்லை. தேசிகர், பாகவதர் முதலியோர் இயக்கத்தின் குரலா யினர். அரியக்குடி, செம்மங்குடி போன்றார் எதிர்ப்பு உணர்ச்சியோடு, தெலுங்கு ஓசையே எழுப்பி வரலாயினர். இசையிலும், கட்சி கட்டினர். தமிழிசையைக் கேலி, கிண் டல் செய்தனர். என்றாலும் அவ்வியக்கம், தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரின் ஆதரவையும் பெற்ற
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை