42 மேலும் ஸ்ரீமதியுடன், குமரியும் இடம் பெற்றுள்ளன. அவைகட்குப் பதில் திருமதி, செல்வி என்ற நற்றமிழ்ச் சொற்கள் வழங்கப்படின், எந்த 'ஆட்சி' அழிந்து விடுமோ தெரியவில்லை ! - 'நமஸ்காரம்' என்ற தொல்லைக்குப் பதில் 'வணக்கம்' வழக்குப்பெற எவ்வளவு முயற்சி! அக்ராசனர் - அவைத் தலைவராக, பிரசங்கம் - சொற்பொழிவாக, சபையோர்- அவையோர்களாக, சீமான்கள் பெரியோர்களாக, சீமாட்டிகள் தாய்மார்களாக, வந்தனோபசாரம் - நன்றி யறிவிப்பாக எவ்வளவு காலமாயிற்று என்றெண்ணிப் பாருங்கள். கோவில் வழிபாட்டில்-இன்றும் வடமொழி தானே ஆதிக்கம் செலுத்துகிறது. வேதமந்திர மகிமை கூறி ஏமாற்ற இன்றும் சமஸ்கிருதம் தானே ஒப்புவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழியே இடம் பெற வேண்டும், வேற்று மொழிக்கு இடமளிப்பது கொடுமை, அறியாமை, என்று எவ்வளவோ ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்தும், இன்றும் தமிழ் இடம் பெற்ற பாடில்லையே ! ஏதேனும் ஓரிரு இடங்களில்- தமிழ் இடம் பெற்று விட்டால் மட்டும் போதுமா ? அதனால் தமிழ் வாழ்ந்து விடுமா? பின்னர் வரலாற்றிலே இடம் பெறும், தமிழ் நாட்டின் ஊர் களின் பெயர்களெல்லாம், முன்னர் தமிழாக வழங்கியவை வடமொழியாகத் திரிக்கப்பட்டுள்ளன. அந்த அநீதி துடைக்கப்பட்டு, மறுபடியும் தமிழ்ப்பெயர்களையே அரசாங்கம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வருகிறது. எனினும், இன்றுவரை, விருத்தா சலம், பழமலை ஆகவில்லை, வேதாரண்யம் திருமறைக் காடு ஆகவில்லை. ஆகவிடவில்லை அரசாங்கம் ! - தமிழ் மக்கள் தங்கள் குடும்பச் சடங்குகளைக்கூட, திரு மணம் முதல் இறுதிச்சடங்கு வரை உள்ள அனைத்தையும் வைதீக முறையில் வடமொழி கொண்டு தான் நடத்தி வருகின்றனர். தமிழர் அவற்றைத் தமிழிலே தான் நடத்த வேண்டும் என்பதற்குங்கூட எதிர்ப்புக் கிளம்பி யது இந்நாட்டில். உண்மையில் உள்ளத்தில் நஞ்சும் உதட்
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை